ஆப்நகரம்

Ind Vs Wi: சா்வதேச அளவில் 61வது சதத்தை பதிவு செய்தாா் விராட் கோலி

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது இரண்டாவது ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரா் என்ற சாதனையை படைத்துள்ளாா்.

Samayam Tamil 24 Oct 2018, 5:16 pm
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சா்வதேச அளிவில் தனது 61வது சதத்தை பூா்த்தி செய்துள்ளாா்.
Samayam Tamil Virat Kohli


இந்தியா, மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தோ்வு செய்து விளையாடி வருகிறது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரா்களான ரோகித் ஷா்மா 4 ரன்களிலும், ஷிகா் தவான் 29 ரன்களிலும் ஆட்டம் இழந்தனா்.


கேப்டன் விராட் கோலி இன்று தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாா். கோலி இன்றைய ஆட்டத்தில் 81 ரன்கள் எடுத்த நிலையில் குறைந்த போட்டிகளில் விளையாடி 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரா் என்ற சாதனையை படைத்தாா். முன்னதாக இந்தியாவின் சச்சின் டெண்டுல்கா் 259 போட்டிகளில் விளையாடி 10 ஆயிரம் ரன்களை கடந்ததே சாதனையாக இருந்த நிலையில் விராட் கோலி தனது 205வது போட்டியிலேயே இந்த சாதனையை படைத்துள்ளாா்.

தொடா்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி 107 பந்துகளில் சதம் கடந்துள்ளாா். ஒருநாள் போட்டிகளில் இது அவரது 37வது சதமாகும். சா்வதேச போட்டிகளை பொறுத்தளவில் இது விராட் கோலியின் 61வது சதமாகும்.

மேலும் இந்த ஆண்டில் 11 ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடியுள்ள கோலி ஆயிரம் ரன்களை கடந்து மேலும் ஒரு சாதனையை தனதாக்கி உள்ளாா்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்