ஆப்நகரம்

கார்த்திக், அஷ்வினை கழட்டி விட்ட கோலி: காலம் போன பின் ரகானேவுக்கு வாய்ப்பு!

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டி ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் கோலி ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

Samayam Tamil 24 Jan 2018, 1:24 pm
ஜோகானஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டி ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் கோலி ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.
Samayam Tamil india win toss and opt to bat first vs south africa at new wanderers stadium johannesburg ajinkyarahane88 and bhuviofficial in
கார்த்திக், அஷ்வினை கழட்டி விட்ட கோலி: காலம் போன பின் ரகானேவுக்கு வாய்ப்பு!


தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு டெஸ்டில் இந்திய அணி ஒருவிதமான போராட்டத்தையும் வெளிப்படுத்தாமல் படுதோல்வியை சந்தித்து, தொடரை 2-0 என இழந்தது.

இந்நிலையில் இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை ஜோகானஸ்பர்க்கில் துவங்கியது. இதில் இந்திய அணி ஆறுதல் வெற்றியை நோக்கி களமிறங்குகிறது.

லேட்டான முடிவு:
இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். இந்திய அணியில் அஷ்வின் நீக்கப்பட்டு புவனேஷ்வர் சேர்க்கப்பட்டார். அதே போல ரோகித் சர்மாவுக்கு பதில் ரகானே சேர்க்கப்பட்டார்.

#TeamIndia has won the toss and elected to bat first in the 3rd Test #SAvIND pic.twitter.com/SEpdvhhYIq — BCCI (@BCCI) January 24, 2018 கார்த்திக் இல்லை:
இரண்டாவது டெஸ்டில் சொதப்பிய விக்கெட் கீப்பர் பார்த்தீவ் படேல் மீண்டும் அணியில் இடம் பிடித்தார். தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. தென் ஆப்ரிக்க அணியில் கேசவ் மகராஜூக்கு பதில்,’ பிளக்வாயோ சேர்க்கப்பட்டார்.

Kohli wins toss and opts to bat #SAvIN

அடுத்த செய்தி

டிரெண்டிங்