ஆப்நகரம்

இறுதிப்போட்டியில் தென் ஆப்ரிக்க அணியை த்ரில்லாக வென்றது இந்தியா

உலகக் கோப்பை பெண்கள் கிரிக்கெட் தகுதிப்போட்டியின் இறுதிப்போட்டியில், தென் ஆப்ரிக்கா அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றுள்ளது இந்திய அணி.

TOI Sports 21 Feb 2017, 6:54 pm
கொழும்பு : உலகக் கோப்பை பெண்கள் கிரிக்கெட் தகுதிப்போட்டியின் இறுதிப்போட்டியில், தென் ஆப்ரிக்கா அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றுள்ளது இந்திய அணி.
Samayam Tamil india women clinch thrilling win in world cup qualifiers final
இறுதிப்போட்டியில் தென் ஆப்ரிக்க அணியை த்ரில்லாக வென்றது இந்தியா


உலகக் கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து அணிகள் ஏற்கனவே நேரடி தகுதி பெற்றது. இந்நிலையில் உலகக் கோப்பை பெண்கள் கிரிக்கெட் 2017 போட்டியில் பங்கேற்க உள்ள மற்ற 4 அணிகளுக்கான தகுதிப்போட்டிகள் இலங்கையில் நடைப்பெற்றது.

இந்த தகுதிப்போட்டியின் இறுதிப்போட்டியில் இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள் பங்கேற்றது. இதில் டாஸ் வென்ற தெ.ஆ அணி 50 ஓவரில் 244 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில் முதல் பந்திலேயே இரண்டு ரன் எடுக்கும் போது விக்கெட் பறிபோனது, அடுத்த மூன்று பந்துகளுக்கு ஒருரன்னும் எடுக்க முடியவில்லை. 5வது பந்தில் சிக்ஸரும், கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்து த்ரில்லாக இந்தியா அணி வெற்றி பெற்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்