ஆப்நகரம்

உலக கோப்பை போட்டிக்கு நேரடி தகுதி வாய்ப்பை இழந்தது இந்திய பெண்கள் அணி

இங்கிலாந்தில் 2017 உலகக் கோப்பையில் தானாகவே தகுதியடையும் வாய்ப்பை இந்திய பெண்கள் அணி இழந்துள்ளது.

TOI Sports 23 Nov 2016, 3:45 pm
இங்கிலாந்தில் 2017 உலகக் கோப்பையில் நேரடியாக தகுதியடையும் வாய்ப்பை இந்திய பெண்கள் அணி இழந்துள்ளது.
Samayam Tamil india women lose out on automatic qualification for world cup
உலக கோப்பை போட்டிக்கு நேரடி தகுதி வாய்ப்பை இழந்தது இந்திய பெண்கள் அணி


தரவரிசைப் பட்டியலில் முதல் 4 இடங்களை பெறும் அணிகள் உலகக் கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க நேரடியாக தகுதி பெற்று விடும். ஆனால் இந்திய பெண்கள் அணி 3 புள்ளிகள் குறைந்து தரவரிசையில் 5வது இடத்தை பிடித்ததால் அந்த வாய்ப்பை இழந்துள்ளது. இதேபோல தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், இலங்கை முறையே 6,7,8வது இடங்களை பிடித்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பங்கேற்பதாக இருந்த 3 போட்டிகள் கொண்ட தொடர் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டதால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, ஐசிசி விதிகளின் படி அப்போட்டிகளுக்கான புள்ளிகள் வழங்கப்படவில்லை. இதனால் இந்திய அணி 4வது இடத்திற்கு முன்னேற முடியவில்லை.

இதையடுத்து இலங்கையில் அடுத்தாண்டு பிப்ரவரி 7-21 வரை நடைப்பெறும் தகுதி சுற்று போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை, வங்கதேசம், அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, பபுவா நியூகினியா, தாய்லாந்து ஆகிய அணிகள் பங்கேற்க உள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்