ஆப்நகரம்

Ricky Ponting: ரிக்கி பாண்டிங் சாதனையை காலி செய்ய காத்திருக்கும் கிங் கோலி...!

ராஞ்சி : தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்திய கேப்டன் விராட் கோலி, முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் சாதனையை தகர்ப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 17 Oct 2019, 9:33 pm
இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி, நாளை மறுநாள் ராஞ்சியில் துவங்குகிறது. இந்நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி புது மைல்கல்லை எட்டவுள்ளார். இத்தொடரின் முதல் இரண்டு டெஸ்டிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, 2-0 என ஏற்கனவே டெஸ்ட் தொடரை கைப்பற்றிவிட்டது.
Samayam Tamil Virat Kohli


சாதனை சதம்...
இந்நிலையில் மூன்றாவது டெஸ்டில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, சதம் அடிக்கும் பட்சத்தில் டெஸ்ட் அரங்கில் அதிக சதங்கள் விளாசிய கேப்டன்கள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறுவார்.

தமிழகம் சும்மா கில்லி மாதிரி சொல்லி அடிக்கிறது: வாட்சன்!

தற்போது டெஸ்ட் அரங்கில் கேப்டனாக 19 சதமடித்துள்ள இந்திய கேப்டன் கோலி, இரண்டாவது இடத்தை முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்துள்ளார்.

20வது சதம்...
மூண்றாவது டெஸ்டில் கோலி 1 சதம் அடிக்கும் பட்சத்தில் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை தகர்ப்பார். இப்பட்டியலில் முன்னாள் தென் ஆப்ரிக்க கேப்டன் கிரேம் ஸ்மித் (25 சதங்கள்) முதலிடத்தில் உள்ளார்.

ராஞ்சி டெஸ்ட்டுக்கு 5000 இலவச டிக்கெட்டுகள்: ஜார்கண்ட் சங்கம் அதிரடி!

இரண்டாவது இடத்தில் கோலி , ரிக்கி பாண்டிங் (19 சதங்கள்) உ ள்ளனர். மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் (15), ஆலன் பார்டர் (15) ஆகியோர் உள்ளனர். பிராட்மேன் (14) நான்காவது இடத்தில் உள்ளார்.

ஏற்கனவே எச்சரிக்கை...
இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு பின், தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்டோம் என்பதால் யாரும் ரிலாக்ஸ் செய்யப்போவதில்லை என்றும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்பதால் கடைசி டெஸ்ட் போட்டியிலும் வெல்ல முயற்சிப்போம் என இந்திய கேப்டன் விராட் கோலி, தென் ஆப்ரிக்க அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


தீவிர பயிற்சி...
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று நடந்த பயிற்சியில் பங்கேற்றுள்ளனர். ஆனால் இதில் இந்திய கேப்டன் விராட் கோலி, ரோஹிஷ் ஷர்மா ஆகியோர் பங்கேற்கவில்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்