ஆப்நகரம்

அம்பதி ராயுடு பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ’தல’ தோனிக்கு சிறப்பு - வீடியோ!

இந்திய கிரிக்கெட் அணியினர், அம்பதி ராயுடு பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Samayam Tamil 26 Sep 2018, 1:41 pm
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள அம்பதி ராயுடு, கேப்டன் தோனி தலைமையில் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். இதன்மூலம் இந்திய அணிக்கு தகுதி பெறும் வாய்ப்பை பெற்றார்.
Samayam Tamil Rayudu.


சமீபத்தில் இங்கிலாந்து தொடருக்கு தேர்வான நிலையில், யோ யோ டெஸ்டில் தோல்வி அடைந்ததால் நீக்கப்பட்டார். மீண்டும் கடின முயற்சிக்கு பின், யோ யோ டெஸ்டில் தேர்ச்சி பெற்று, இந்திய அணியில் இடம்பிடித்தார்.

சில தினங்களுக்கு முன், ஆசியக் கோப்பை தொடரின் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெற்றது. அதில் இந்தியா சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில் அம்பதி ராயுடுவின் பிறந்த நாளை, சக இந்திய வீரர்கள் ஒன்று சேர்ந்து சிறப்பாகக் கொண்டாடினர். அப்போது முதலில் தோனிக்கு கேக் ஊட்டி அம்பதி ராயுடு மகிழ்ந்தார். பின்னர் சக வீரர்களின் வாழ்த்து மழையிலும், கேக் மழையிலும் நனைந்தார்.

Indian cricket team celebrates Ambati Rayudu's birthday in dubai.

அடுத்த செய்தி

டிரெண்டிங்