ஆப்நகரம்

கோப்பைகள் பல வென்றும் 6 மாத சம்பள பாக்கியாம் : கோலிக்கு மட்டும் எவ்வளவு தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு கடந்த 6 மாதமாக சம்பளம் கொடுக்கப்படாமல் இழுத்தடிப்பதாக புலம்பி வருகின்றனர்.

TOI Sports 28 Apr 2017, 5:00 pm
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு கடந்த 6 மாதமாக சம்பளம் கொடுக்கப்படாமல் இழுத்தடிப்பதாக புலம்பி வருகின்றனர்.
Samayam Tamil indian cricket team yet to receive their last 6 months due from bcci
கோப்பைகள் பல வென்றும் 6 மாத சம்பள பாக்கியாம் : கோலிக்கு மட்டும் எவ்வளவு தெரியுமா?


இந்திய முன்னனி, சீனியர் வீரர்களுக்கு ஒரு டெஸ்ட் போட்டி விளையாடினால் 15 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகின்றது. அதே போல அணியில் இடம் பெற்றும் விளையாடவில்லை என்றாலும் 7 லட்சம் வழங்கப்படுகிறது.

இதே போல பெண்கள் அணி வீராங்கனைகளுக்கு ஒரு சீரிஸ் போட்டிகளில் விளையாடினா தலா 1 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகின்றது.

சம்பள இழுத்தடிப்பு:
இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆறு மாதங்களில் நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுடன் டெஸ்ட் போட்டி தொடர்களில் விளையாடி அனைத்திலும் கோப்பையை கைப்பற்றியது.

இந்நிலையில் ஆடவர் மற்றும் பெண்கள் அணி வீரர்களுக்கு கடந்த 6 மாதமாக சம்பளத் தொகை வழங்கப்படவில்லையாம். சாதாரணமாக 15 நாட்கள் தாமதமாக கொடுக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை 6 மாதமாகியும் கொடுக்கப்படவில்லை என வீரர்கள் புலம்புகின்றனர்.

ஐசிசியுடன் பிரச்னை:
இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், பிசிசிஐ.,க்கு அதிக பங்குத் தொகை தரவேண்டும் என்ற கோரிக்கை ஐசிசி.,யிடம் வைத்துள்ளது.

ஐசிசி கொடுக்க்க வேண்டிய தொகை இன்னும் பிசிசிஐ.,க்கு சரிவர கிடைக்க வில்லை என்பதாலும், பிரச்னை பல மாதங்களாக தொடர்வதால் சம்பளத் தொகை கொடுப்பதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

கோலிக்கு மட்டும் 1.95 கோடி பாக்கி:
சீனியர் வீரர் கோலி கடைசி 6 மாதங்களில் நியூசிலாந்து 3, இங்கிலாந்து 5, வங்கதேசம் 1, ஆஸ்திரேலியா 4 போட்டிகளில் பங்கேற்றார்.
அப்படி பார்த்தால் ஒரு டெஸ்ட் போட்டிக்கு 15 லட்சம் எனில் மொத்தம் 13 போட்டிக்கு 1 கோடியே 95 லட்சம் கொடுக்க வேண்டியதுள்ளதாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்