ஆப்நகரம்

முடிவுக்கு வருகிறதா புவனேஷ்வர் குமார் கிரிக்கெட் வாழ்வு...: என்ன தான் ஆச்சு அவருக்கு...?

புதுடெல்லி: இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் காயம் குறித்து எவ்வித தகவலும் வெளியிடாத தேசிய கிரிக்கெட் அகாடமி மீது சந்தேகம் எழுந்துள்ளது.

Samayam Tamil 30 Oct 2019, 3:46 pm
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார். இவர் கிட்டத்தட்ட ஒர் ஆண்டாக இந்திய அணியில் இடம் பெறவில்லை. காயம் காரணமாக விலகியிருந்த இவரின் காயம் குறித்த எந்த ஒரு தகவலும் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமி வெளியிடவில்லை.
Samayam Tamil Bhuvneshwar Kumar


எப்போது வருவார்..?
இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் மீண்டும் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கம் போல புவனேஷ்வர் குமாரின் பெயர் இடம் பெறவில்லை. தவிர, இதற்கான முறையான காரணமும் தெரிவிக்கப்படவில்லை.

இந்தியாவிடம் இருந்து இந்த விஷயத்தை எப்பிடியாவது காப்பியடிச்சிருங்க....: இயான் சாப்பல்!

ஜூலை 2018...
கடந்த 2018 ஜூலை மாதம் முதல் காயம் காரணமாக ஒதுங்கியுள்ள புவனேஷ்வர் குமாருக்கு முறையாக மருத்துவ சிகிச்சை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. ஆனால் உலகக்கோப்பை தொடருக்கு மட்டும் அவரை அழைத்துச்செல்ல திட்டமிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன காயம்...
சுமார் ஒரு ஆண்டுக்கு மேலாக புவனேஷ்வர் குமார் புறக்கணிக்கப்படுவதற்கான முறையாக காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. கடைசியாக கிடைத்த தகவலின் படி புவனேஷ்வர் குமார் தசைப்பிடிப்பு காரணமாக அணியில் இடம் பெறவில்லை.

ஷாகிப்புக்கு தடை.... இந்திய தொடருக்கு கேப்டன்கள் மாற்றம்...!

ஆனால் அதற்கு பின், இவரின் காயம் குறித்த முறையான அறிவிப்போ அல்லது தென் ஆப்ரிக்க , மற்றும் வங்கதேச தொடர்களில் ஏன் புறக்கணிக்கப்பட்டார் என்பதற்கான காரணமோ இதுவரை வெளியிடப்படவில்லை.

இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘புவனேஷ்வரின் காயத்துக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை. அவரின் காயம் நாளுக்கு நாள் தீவிரமடைந்தது. உலகக்கோப்பை தொடருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, காயத்துடன் புவனேஷ்வர் இங்கிலாந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அடுத்த டி-20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக புவனேஷ்வர் குமார் முழுமையாக குணமடைய வேண்டும்.’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்