ஆப்நகரம்

ICC ODI Ranking: நம்பர்-1 இடத்தை இழந்த யார்க்கர் ஹீரோ பும்ரா... தப்பிய ‘கிங்’ கோலி... !

துபாய்: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களின் தரவரிசைப்பட்டியலை ஐ.சி.சி., வெளியிட்டது. இதில் கோலி நம்பர்-1 இடத்தில் நீடிக்கின்றனர். ஆனால் பும்ரா முதலிடத்தை இழந்தார்.

Samayam Tamil 12 Feb 2020, 3:25 pm
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய அணி (121 புள்ளிகள்) இரண்டாவது இடத்தை தக்க வைத்துக்கொண்டது.
Samayam Tamil Jasprit Bumrah


இங்கிலாந்து அணி (125) முதலிடத்தில் இடத்தில் உள்ளது. நியூசிலாந்து (112), தென் ஆப்ரிக்கா (110), ஆஸ்திரேலியா (110) அணிகள் அடுத்த மூன்று இடங்களில் உள்ளன.

கோலி டாப்
சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில் இந்திய கேப்டன் விராட் கோலி (869) நம்பர்-1 இடத்தில் நீடிக்கிறார். மற்றொரு இந்திய வீரர் ரோஹித் ஷர்மா (855) இரண்டாவது இடத்தில் உள்ளார். பாகிஸ்தானின் பாபர் அசாம் (829) மூன்றாவது இடத்தில் உள்ளார்.


மற்ற இந்திய வீரர்கள் யாரும் ‘டாப்-10’ல் இடம் பெறவில்லை ஷிகர் தவான் (699) 19ஆவது இடத்திலும், முன்னாள் கேப்டன் தோனி (634) 25ஆவது இடத்திலும் உள்ளனர்.

பும்ரா சறுக்கல்
சிறந்த பவுலர்களுக்கான ரேங்கிங்கில் இந்திய வீரர் பும்ரா (719) தனது நம்பர்-1 இடத்தை இழந்தார். நியூசிலாந்தின் டிரெண்ட் பவுல்ட் (727), முதலிடத்துக்கு முன்னேறினார். ஆப்கானிஸ்தானின் முஜீப் உர் ரஹ்மான் (701) மூன்றாவது இடம் பிடித்தார்.


இந்திய சுழற்பந்துவீச்சாளர்களான சஹல் (622) 13ஆவது இடத்துக்கு முன்னேறினார். குல்தீப் (609) 16ஆவது இடத்தில் தள்ளப்பட்டார்.


நபி நம்பர்-1
சிறந்த ஆல் ரவுண்டர்கள் பட்டியலில், ஆப்கானிஸ்தானின் முகமது நபி (301) முதலிடத்துக்கு முன்னேறினார். இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் (294) இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். பாகிஸ்தானின் இமாத் வாசிம் (278) மூன்றாவது இடத்தில் உள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்