ஆப்நகரம்

இரட்டை சதம் விளாசி வெளியேறிய மாயங்க்... : அசைக்க முடியாத நிலையில் இந்திய அணி!

விசாகப்பட்டினம்: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய வீரர் மாயங்க் அகர்வால் இரட்டைசதம் விளாச இந்திய அணி வலுவான நிலையை எட்டியுள்ளது.

Samayam Tamil 3 Oct 2019, 2:48 pm
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் இரண்டாவது நாள், உணவு இடைவேளையின் போது, இந்திய அணி முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு, 324 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
Samayam Tamil Mayank Agarwal 4


மாயங்க் இரட்டை சதம்...
உணவு இடைவேளைக்கு பின், முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு, ரோஹித் ஷர்மா (176) இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டு வெளியேறினார். அடுத்து வந்த புஜாரா (6) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.

தென் ஆப்ரிக்காவுக்கு மரண பயத்தை காட்டிய மாயங்க், ரோஹித்....: பல சாதனை தகர்த்து மிரட்டல்!

கோலி ஏமாற்றம்..
கேப்டன் கோலி (20) செனுரான் முத்துசாமி சுழலில் சிக்கினார். ரஹானே (15) நிலைக்கவில்லை. ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும், மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மாயங்க் அகர்வால் (215) இரட்டை சதம் அடித்து வெளியேறினார்.

காத்துல பறந்த மோதல்... டான் ரோஹித்துக்காக கதவு அருகே காத்திருந்த கோலி... !

அடுத்து வந்த ரவிந்திர ஜடேஜா, ஹனுமா விஹாரி ஆகியோர் விக்கெட் வீழ்ச்சியை தடுத்து ஆட, இரண்டாவது நாள் தேனீர் இடைவேளையின் போது இந்திய அணி, முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 450 ரன்கள் எடுத்துள்ளது. ரவிந்திர ஜடேஜா (6), விஹாரி (8) அவுட்டாகாமல் உள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்