ஆப்நகரம்

Murali Vijay: பயிற்சி டெஸ்ட் போட்டியில் வெறும் 27 பந்தில் அரை சதம் விளாசிய முரளி விஜய்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் முரளி விஜய் சதம் அடித்த நிலையில், வெறும் 27 பந்தில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.

Samayam Tamil 1 Dec 2018, 7:01 pm
சிட்னி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் முரளி விஜய் 132 பந்தில் அதிரடியாக 129 ரன்களை குவித்து அசத்தியுள்ளார்.
Samayam Tamil Murali-vijay


ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. 3 டி20 போட்டி தொடர் இந்தியா, ஆஸ்திரேலியா 1-1 வென்றதால் என சமனில் முடிந்தது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பவுலிங் செய்தது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 358 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா 544 ரன்களை எடுத்தது.

முரளி விஜய் சதம் :
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணிக்கு கே.எல். ராகுல் 62, முரளி விஜய் 129 ரன்கள் என இந்த இணை மிக சிறப்பாக விளையாடினர்.

அணியில் இடம்பிடிக்க ஒரு ஓவரில் 26 ரன்களை விளாசி சதம் அடித்த முரளி விஜய்

132 பந்தில் 129 ரன்கள் :
இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸின் போது தமிழக வீரர் முரளி விஜய் மொத்தம் 132 பந்தில் 129 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

விக்கெட் கீப்பரை தவிர அனைத்து இந்திய வீரர்களும் பந்து வீசிய அதிசயம்

அதில் முதல் 50 ரன்களை 81 பந்துகளில் அடித்தார். அடுத்த அரைசதத்தை வெறும் 27 பந்துகளில் அதாவது 100 ரன்கள் (118 பந்துகள்) அடித்து அசத்தினார்.
அடுத்த 14 பந்துகளில் 29 ரன்கள் என அதிரடியாக ரன் குவித்து மொத்தம் 132 பந்தில் 129 ரன்களை குவித்தார்.

ஆஸிக்கு எதிராக பவுலிங் செய்து, விக்கெட் வீழ்த்தியதை நம்ப முடியாமல் சிரித்த கோலி

இவர் விக்கெட்டை இழந்ததும், ஆஸ்திரேலியா போட்டியை முடித்துக் கொள்ளலாம் என கூறியது. இதையடுத்து பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்