ஆப்நகரம்

இந்திய XI அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய XI அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 6 Jan 2021, 3:08 pm
சிட்னியில் நாளை துவங்கவுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் பங்கேற்கும் இந்திய XI அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக வீரர் நடராஜன் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நவ்தீப் சைனி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மயங்க் அகர்வால் நீக்கப்பட்டு ரோஹித் ஷர்மாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil ind vs aus


இரண்டாவது டெஸ்டின்போது காயத்தால் அவதிப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு, எஞ்சிய இரண்டு டெஸ்ட்களில் நடராஜன் பெயர் சேர்க்கப்பட்டது. அதேபோல், முதல் டெஸ்டில் காயத்தால் அவதிப்பட்ட முகமது ஷமிக்கு மாற்றாக ஷர்துல் தாகூர் அணியில் இணைந்தார். இதனால், ஏற்கெனவே அணியிலிருந்த நவ்தீப் சைனி, நடராஜன், ஷர்துல் தாகூர் போன்றவர்களில் ஒருவர் களமிறங்குவது உறுதியானது.

தோனி சாதனையை சமன் செய்வாரா ரஹானே?

இவர்களில் யார் களமிறங்குவார் என்பது குறித்துப் பேசிய பல கிரிக்கெட் பிரபலங்கள் நவ்தீப் சைனிக்குத்தான் வாய்ப்பு அதிகம் எனத் தெரிவித்தனர். அதன்படியே சைனிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. காயத்தால் அவதிப்பட்ட ரோஹித் ஷர்மா அணிக்குத் திரும்பியதால், துவக்க வீரரில் ஒருவர் நீக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன்படி, மயங்க் அகர்வால் நீக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் டேவிட் வார்னர், வில் புகோஸ்கி சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் துவக்க வீரர்களாகக் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. இதனால், மேத்யூ வேட் பழையபடி மிடில் வரிசைக்கு நகருவார் எனக் கருதப்படுகிறது. ஆஸ்திரேலிய தரப்பு இன்னும் தங்கள் தரப்பு XI அணியை அறிவிக்கவில்லை. டாஸ் போடுவதற்கு முன்பு அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.


இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 எனச் சமநிலையில் நீடிக்கின்றன. மூன்றாவது டெஸ்டில் வெற்றிபெறும் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பையைக் கையகப்படுத்த அதிக வாய்ப்புள்ளதால் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய XI அணி: ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், சேத்தேஸ்வர் புஜாரா, அஜிங்கிய ரஹானே (கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பரீத் பும்ரா, முகமது சிராஜ், நவ்தீப் சைனி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்