ஆப்நகரம்

‘அணிக்கு திரும்பும் கே.எல்.ராகுல்’…எப்போது முதல் பங்கேற்பார்? வெளியானது முக்கிய தகவல்!

கே.எல்.ராகுல் எப்போது அணிக்கு திரும்புவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 30 Jun 2022, 2:42 pm
இந்திய அணி துணைக் கேப்டன் கே.எல்.ராகுல் அவ்வபோது காயத்தால் அவதிப்பட்டு வந்தார். இந்தாண்டில் மட்டும் 3 முறை காயம் காரணமாக விலகியுள்ளார்.
Samayam Tamil கே.எல்.ராகுல்


குறிப்பாக, ஜூலை 1 (நாளை) முதல் துவங்கும் இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கு துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் காயம் காரணமாக விலகினார். இவர் எப்படி அடிக்கடி காயம் காரணமாக விலகுவதால், முழு பிட்னஸ் அடைய பிசிசிஐ சார்பாக ஜெர்மனிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார்.

சக்சஸ்:

அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் டி20 உலகக் கோப்பை வரை, அவர் ஓய்வில் இருக்கும் நிலை ஏற்படும் என தகவல் வெளியானது. இந்நிலையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.

ராகுல் கருத்து:

இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட அவர், “கடந்த 2 வாரங்கள் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. எனக்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றியடைந்துவிட்டது. தற்போது காயம் குணமாகி வருகிறது. உடல்நிலை மேம்பட்டு வருகிறது. முழு உடற்தகுதியை மீட்கும் பயணத்தை இன்றுமுதல் துவங்கியுள்ளேன். எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றிகள்” எனத் தெரிவித்துள்ளார்.

45 நாட்கள்:

மேலும் கே.எல்.ராகுலின் காயம் குணமடைய 45 நாட்கள்வரை மட்டுமே ஆகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் ராகுல் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் பங்கேற்க வாய்ப்பில்லை என்பது தெரிய வருகிறது. நேரடியாக ஆசியக் கோப்பையில்தான் பங்கேற்க முடியும். இதனால், அக்டோபர் இறுதியில் ஆஸ்திரேலியாவில் துவங்கும் டி20 உலகக் கோப்பையில் ராகுலுக்கு இடம் கிடைப்பது மிகமிக கடினம் எனக் கூறப்படுகிறது.

மேலும் கே.எல்.ராகுலின் இடத்தை இஷான் கிஷன் அல்லது சஞ்சு சாம்சன் ஆகியோரில் ஒருவர்தான் பிடிக்க வாய்ப்புள்ளது என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்