ஆப்நகரம்

தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணியை பிரித்து மேய்ந்த இந்திய பெண்கள் அணி!!

தென் ஆப்பிரிக்கா மகளிர் அணியுடனான 2வது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 9விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றுள்ளது

Samayam Tamil 17 Feb 2018, 5:14 pm
தென் ஆப்பிரிக்கா மகளிர் அணியுடனான 2வது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 9விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றுள்ளது.
Samayam Tamil indian womens team has registered another victory against proteas womens team
தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணியை பிரித்து மேய்ந்த இந்திய பெண்கள் அணி!!


இந்திய ஆண்கள் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதை போல், இந்திய மகளிரணியும் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய மகளிரணி அபாரமாக வென்றது.

இதையடுத்து, இவ்விரு அணிகளுக்கும் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க மகளிரணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 142 ரன்கள் குவித்தது. 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரர்களான மிதாலி ராஜும், மந்தனாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
India's @M_Raj03 hits a Women's T20I record fourth consecutive half century, making her T20I high score of 76* to fire India to a nine wicket win and 2-0 series lead in East London!#SAvIND scorecard ➡️ https://t.co/wueWNk1mTP pic.twitter.com/gsW52Bpw9F — ICC (@ICC) February 16, 2018 மந்தனா 57 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை காட்டிய மிதாலி ராஜ் டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக 4வது அரைசதத்தைப் பதிவு செய்தார். இறுதியில் இந்திய அணி 19.1 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிதாலி ராஜ் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்