ஆப்நகரம்

வங்கதேசத்தை வருத்தெடுத்த முரளி விஜய் சதம் : ஆயிரம் எடுத்து அசத்திய விராட் கோலி!

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய வீரர் முரளிவிஜய் தனது 9வது சதத்தை பதிவு செய்து அசத்தினார். உள்ளூரில் பங்கேற்ற டெஸ்டில் கோலி இந்த ஆண்டில் ஆயிரம் ரன்களை கடந்து அசத்தினார்.

TOI Sports 9 Feb 2017, 3:15 pm
ஹைதராபாத்: வங்கதேச அணிக்குஎதிரான முதல் டெஸ்டில் இந்திய வீரர் முரளிவிஜய் தனது 9வது சதத்தை பதிவு செய்து அசத்தினார். உள்ளூரில் பங்கேற்ற டெஸ்டில் கோலி இந்த ஆண்டில் ஆயிரம் ரன்களை கடந்து அசத்தினார்.
Samayam Tamil 2
வங்கதேசத்தை வருத்தெடுத்த முரளி விஜய் சதம் : ஆயிரம் எடுத்து அசத்திய விராட் கோலி!


இந்தியா வரும் ஆஸ்திரேலியஅணிக்கு எதிரான டெஸ்ட்தொடருக்கு முன், வங்கதேச அணிக்குஎதிரான ஒரே ஒரு டெஸ்ட் தொடரில் இந்திய அணி, பங்கேற்கவுள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் இன்று ஹைதராபாத்தில் நடக்கிறது. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர் கே.எல்.ராகுல் (2) சொதப்பலான முறையில் போல்டானார்.
இதன்பின் வந்த புஜாரா, முரளி விஜய் உடன் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஆனால், ரன்கள் ஓடுவதில்சொதப்பியது இந்த ஜோடி. முதலில் புஜாரா ரன் அவுட் வாய்ப்பில் இருந்து
தப்பினார். பின் முரளி விஜய்க்கு மிகஈஷியானரன் அவுட் வாய்ப்பைவங்கதேச வீரர்கள் தவறவிட்டனர் .
ஒருவழியாக உணவு இடைவேளை வரை தாக்கு பிடித்தது. பின் வந்த புஜாரா (83) அரைசதம் அடித்து அவுட்டானார். இதன்பின் முரளி விஜய் டெஸ்ட் அரங்கில் தனது 9வது சதத்தை பதிவு செய்தார். இவர் 108 ரன்கள் எடுத்த போது இஸ்லாம் பந்தில் போல்டானார். எதிர்முனையில் இந்திய கேப்டன் கோலி, 36 ரன்கள் எடுத்த போது, 2016-2017ம் ஆண்டில் உள்ளூரில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.

முதல் நாள் தேநீர் இடைவேளைக்கு பின் இந்திய அணி, முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 242 ரன்கள் எடுத்திருந்தது. கோலி (39), ரகானே (3) அவுட்டாகாமல் உள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்