ஆப்நகரம்

முரளி விஜய் அசத்தல் சதம் : நாக்கு தள்ள தள்ள பவுலிங் செய்யும் இலங்கை!

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில், இந்திய வீரர் முரளி விஜய் அசத்தலான சதம் விளாசினார். இலங்கை பவுலர்கள் விக்கெட் வீழ்த்த முடியாமல் தடுமாறி வருகின்றனர்.

TOI Sports 2 Dec 2017, 2:27 pm
புதுடெல்லி: இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில், இந்திய வீரர் முரளி விஜய் அசத்தலான சதம் விளாசினார். இலங்கை பவுலர்கள் விக்கெட் வீழ்த்த முடியாமல் தடுமாறி வருகின்றனர்.
Samayam Tamil 2 mvj888 101 imvkohli 94
முரளி விஜய் அசத்தல் சதம் : நாக்கு தள்ள தள்ள பவுலிங் செய்யும் இலங்கை!


இந்தியா வந்துள்ள இலங்கை அணி, முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதலிரண்டு டெஸ்டின் முடிவில், இந்திய அணி, 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் டெல்லியில் நடக்கிறது.

இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு தவான் (23), புஜாரா (23) ஆகியோர் தாக்குபிடிக்கவில்லை.

கேப்டன் கோலியுடன் இணைந்த முரளி விஜய் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவ்வப்போது பவுண்டரிகள் விளாசிய விஜய், டெஸ்ட் அரங்கில் தனது 11வது சதத்தை பூர்த்தி செய்தார். முதல் நாள் தேநீர் இடைவேளையின் போது, இந்திய அணி, முதல் இன்னிங்சில், 2 விக்கெட்டுக்கு, 245 ரன்கள் எடுத்துள்ளது. கோலி (94*), விஜய் (101*) களத்தில் உள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்