ஆப்நகரம்

Virat Kohli: இன்ஸ்டாகிராம் கல்லா கட்டும் பிரியங்கா சோப்ரா, விராட் கோலி... ஒரு போஸ்டுக்கு இத்தனை கோடிகளா?

இன்ஸ்டாகிராம் அதிக மதிப்பு மிக்க நபர்களில் இந்தியாவின் பிரியங்கா சோப்ரா, விராட் கோலி இடம்பெற்றுள்ளனர்.

Samayam Tamil 24 Jul 2019, 11:04 pm

உலக கிரிக்கெட்டில் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இந்திய கேப்டன் விராட் கோலி உள்ளார். இவரின் மிகச்சிறப்பான பேட்டிங்கால் ஈர்த்த கோலி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 3 கோடியே 80 லட்சத்திற்கும் அதிகமான பாளோவர்களை வைத்துள்ளார்.
Samayam Tamil Priyanka Chopra Virat Kohli 1


கோலி தான் வைத்துள்ள ஃபாளோவர்கள் எண்ணிக்கை வைத்து அவர் வெளியிடும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுகளின் மதிப்பு அதிகரித்துள்ளது.

TNPL 2019: திடீரென வேகப்பந்து வீச்சாளராக மாறிய அஸ்வின்... பந்து வீச தடை விதிக்க வாய்ப்பு?

யாருக்கு அதிக மதிப்பு?
அந்த வகையில் இந்தியாவில் அதிக இன்ஸ்டாகிராம் ஃபாளோவர்கள் மூலம் அதிகமாக சம்பாதிக்கும் பட்டியல் வெளியாகி உள்ளது.

இந்தியாவின் 43.3 மில்லியன் ஃபாளோவர்கள் வைத்துள்ள பிரியங்கா சோப்ரா அவர் பதிவிடும் ஒவ்வொரு போஸ்டுக்கும் $271,000 டாலர் (ரூ. 18,428,000 கோடி) சம்பாதிக்கின்றார்.
அவருக்கு அடுத்தபடியாக 38.2 மில்லியன் ஃபாளோவர்கள் வைத்துள்ள விராட் கோலி அவர் பதிவிடும் ஒவ்வொரு போஸ்டுக்கும் $271,000 டாலர் (ரூ. 1கோடியே 33 லட்சம்) சம்பாதிக்கின்றார்.

ICC Rankings: விராட் கோலி தொடர்ந்து முதலிடம்- ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்

இந்த பட்டியலில் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 176 மில்லியன் ஃபாளோவர்கள் வைத்துள்ளார். இவர் போடும் ஒவ்வொரு போஸ்டுக்கும் சுமார் ரூ. 6 கோடிக்கும் அதிகமாக வருவாய் கிடைக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்