ஆப்நகரம்

குஜராத் அணிக்கு இருந்த ஒரே நல்ல பவுலரும் அவுட்

குஜராத் அணியின் பவுலர்களில் ஒருவரான ஆண்ட்ரிவ் டை, நேற்று நடந்த மும்பை அணிக்கு எதிரான போட்டியின் போது காயமடைந்து வெளியேறினார். இவர் காயமடைந்தது கூட குஜராத் அணியின் தோல்விக்கு முக்கியமான காரணமாக கருதப்படுகிறது.

TOI Sports 30 Apr 2017, 5:20 pm
குஜராத் அணியின் பவுலர்களில் ஒருவரான ஆண்ட்ரிவ் டை, நேற்று நடந்த மும்பை அணிக்கு எதிரான போட்டியின் போது காயமடைந்து வெளியேறினார். இவர் காயமடைந்தது கூட குஜராத் அணியின் தோல்விக்கு முக்கியமான காரணமாக கருதப்படுகிறது.
Samayam Tamil ipl 2017 andrew tye doubtful for remainder of the tournament after suffering shoulder injury
குஜராத் அணிக்கு இருந்த ஒரே நல்ல பவுலரும் அவுட்

நேற்று நடந்த மும்பை அணிக்கு எதிராக குஜராத் அணி, 153 ரன்களை எடுத்தது. தொடர்ந்து மும்பை அணி விளையாடி 153 ரன்கள் மட்டும் எடுத்து போட்டி சமநிலையில் முடிந்தது.
இதனால் சூப்பர் ஓவர் மூலம் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. இதில் மும்பை 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது மும்பை அணிக்கு 10வது ஓவரை ரெய்னா வீசினார்.இதை எதிர்கொண்ட பார்தீவ் படேல் டீப் மிட் விக்கெட் பகுதியில் அடித்தார். அங்கு நின்றிருந்த ஆண்ட்ரீவ் டை பந்தை தடுக்க சறுக்கினார். ஆனால் அவரின் இடது கை மிகவும் அழுத்தியதால் தோள் பட்டையில் காயம் ஏற்பட்டது.

வலியால் துடித்த டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இவர் நேற்றைய போட்டியின் போது ஒரு ஓவர் மட்டும் போட்டிருந்தார். அதில் 9 ரன்களை மட்டும் கொடுத்திருந்தார்.

இவர் இன்னும் 3 ஓவர்கள் போடலாம் என்றிருந்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். இதனால் குஜராத் அணி எளிதில் வெற்றி பெற வேண்டிய சூழலில் சூப்பர் ஓவரில் தோல்வியை மட்டும் பெற்றது.

ஆண்ட்ரிவ் டை காயம் காரணமாக அடுத்து வரும் போட்டிகளில் பங்கேற்பது கடினம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்