ஆப்நகரம்

எட்டு போட்டியில் ‘100’ சிக்சர்கள் : சாதித்த சிக்சர் மன்னன்கள்!

ஐபிஎல் அரங்கில் இரண்டாவது அதிவேகமாக 100 சிக்சர்களை அடித்து வீரர்கள் சாதித்துள்ளனர்.

TOI Sports 11 Apr 2017, 7:01 pm
இந்தூர்: ஐபிஎல் அரங்கில் இரண்டாவது அதிவேகமாக 100 சிக்சர்களை அடித்து வீரர்கள் சாதித்துள்ளனர்.
Samayam Tamil ipl 2017 hits 100 six mark in just eight matches
எட்டு போட்டியில் ‘100’ சிக்சர்கள் : சாதித்த சிக்சர் மன்னன்கள்!


இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர், 10வது ஆண்டாக வெற்றிகரமாக துவங்கி நடந்து வருகிறது. கடந்த 2008 முதல் நடக்கும் இத்தொடரில், எந்த ஆண்டும் இல்லாத வகையில், இந்த ஆண்டு பேட்ஸ்மேன்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.

கடந்த 2008 ஏப்ரல் 5ல் ஆரம்பமான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 8 போட்டிகள் முடிந்துள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் நடத்திய வாண வேடிக்கை காரணமாக, மொத்தமாக 118 சிக்சர்கள் பறந்துள்ளன.

இதன் மூலம் இதுவரை நடந்துள்ள ஐபிஎல் தொடரின் வரலாற்றில், குறைந்த இன்னிங்சில் 100 சிக்சர்களை அடித்த பட்டியலில் கடந்த 2014க்கு (7 போட்டிகள் 14 இன்னிங்ஸ்) பின் புதிய சாதனை படைத்துள்ளனர் பேட்ஸ்மேன்கள்.

தற்போது டிவிலியர்ஸ், விரைவில் கோலி என வரிசையாக நட்சத்திர வீரர்கள் ஒவ்வொருவராக, காயத்தில் இருந்து மீண்டு ஐபிஎல் தொடருக்கு திரும்புவதால், இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக எக்ஸ்பர்ட் கூறுகின்றனர்.

The 2017 season of the Indian Premier League is the second fastest in the history of the tournament to achieve the 100-six mark.

அடுத்த செய்தி

டிரெண்டிங்