ஆப்நகரம்

பென் ஸ்டோக்ஸ், உனத்கத்தை கழட்டி விட திட்டமா?: இப்பவே சூடுபிடிக்கும் ஐபிஎல்., ஏலம்!

மும்பை: கடந்த ஆண்டு அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ், உனத்கத் ஆகியோரை அந்த அணி நிர்வாகம் விடுவிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Samayam Tamil 15 Nov 2018, 3:45 pm
இந்தியாவில் கடந்த 2008 முதல் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இத்தொடர் வெற்றிகராமாக 11 ஆண்டுகள் நடத்தப்பட்டதை தொடர்ந்து அடுத்த ஆண்டு 12வது தொடரை எங்கு மற்றும் எப்போது நடத்துவது என பிசிசிஐ., பெரும் குழப்பத்தில் உள்ளது.
Samayam Tamil 8


இந்தியாவில் அடுத்த ஆண்டு, பொதுத்தேர்தல் நடக்கவுள்ளதால், அந்த தேதிகளில் இந்தியாவில் போட்டிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்படும். அதனால், இந்தியாவுக்கு வெளியே இத்தொடரை முழுமையாக மாற்றுவதா அல்லது பாதி தொடரை மட்டும் வெளியே மாற்றுவதா என்பது தேர்தல் கமிஷன் கைகளில் உள்ளது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடக்கவுள்ளது. இதற்கு முன்னதாக ஐ.பி.எல்., அணிகளில் தக்கவைக்கப்பட்ட, விடுவிக்கப்பட்ட வீரர்கள் விவரத்தை வெளியிட வேண்டும். இதற்கு நேற்று தான் கடைசி நாள். சென்னை அணி கேப்டன் தோனி, ரெய்னா, அம்பதி ராயுடு, டுபிளசி உள்ளிட்ட 22 வீரர்கள் அணியில் நீடிக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ், உனத்கத் ஆகியோரை ராஜஸ்தான் அணி நிர்வாகம் விடுவிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே போல சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகம் மணீஷ் பாண்டேவை விடுவிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்