ஆப்நகரம்

CSK IPL 2020: ஐபிஎல் பயிற்சியை துவங்கிய சின்ன ‘தல’ ரெய்னா... பாகுபலி ‘3-டி’ ராயுடு!

சென்னை: இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான பயிற்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களான சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு ஆகியோர் துவங்கியுள்ளனர்.

Samayam Tamil 24 Jan 2020, 12:43 pm
இந்தாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் ஏப்ரல் மாதம் துவங்கவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியில் இணைந்துள்ளனர். கடந்த மே 12, 2019க்கு பின் ரெய்னா இதுவரை எவ்வித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.
Samayam Tamil Suresh Raina


தக்கவைத்த சிஎஸ்கே
இந்நிலையில் சுரேஷ் ரெய்னாவை இந்தாண்டு ஐபிஎல் தொடருக்கான அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைத்தது. அதே போல உலகக்கோப்பை அணியில் சேர்க்கப்படாத அம்பதி ராயுடுவையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைத்தது. உலகக்கோப்பைக்கான அணியில் தேர்வு செய்யப்படாத விரத்தியில் ராயுடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் அதன் பின் முடிவை மாற்றிக்கொண்டு ஹைதராபாத் அணிக்காக தற்போது விளையாடி வருகிறார்.


தோனி நிலை என்ன
முன்னதாக இந்தாண்டில் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கும் என உறுதியான நிலையில், அடுத்தாண்டு மெகா ஏலத்திலும் சென்னை அணி தோனியை தக்க வைக்க முயற்சிக்கும் என சென்னை அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் தெரிவித்தார். மேலும் இந்த ஆண்டுக்கான வீரர்கள் ஏலத்தில் கொல்கத்தா அணி விடுவித்த சுழற்பந்து வீச்சாளர் ப்யூஸ் சாவ்லாவை ரூ. 6.75 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்தது. இதேபோல இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம் கரனை ரூ. 5.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்