ஆப்நகரம்

ஐ.பி.எல் போட்டிகள் : ஐதராபாத்தை சாய்க்குமா டெல்லி ..!

இன்று நடக்க இருக்கும் ஐ.பி.எல் தொடர் போட்டியில் ஐதரபாத் அணி டெல்லி அணியை சந்திக்க இருக்கிறது.

TNN 2 May 2017, 6:27 pm
இன்று நடக்க இருக்கும் ஐ.பி.எல் தொடர் போட்டியில் ஐதரபாத் அணி டெல்லி அணியை சந்திக்க இருக்கிறது.
Samayam Tamil ipl season 2017 sunrisers hyderabad vs delhi dare devils
ஐ.பி.எல் போட்டிகள் : ஐதராபாத்தை சாய்க்குமா டெல்லி ..!


தற்போது நடைபெற்று வரும் 10-வது ஐபிஎல் சீசன் போட்டிகளில் , ஜாகிர் கான் தலைமையிலான டெல்லி டேர் டெவில்ஸ் அணி அடி மேல் அடி வாங்கி,புள்ளிப்பட்டியலில் அதள பாதாளத்தில் உள்ளது. இந்த தொடரில் விளையாடிய 8 போட்டிகளில் ஆறு போட்டிகளில் தோல்வியடைந்த அந்த அணி தற்போது கடைசி இடத்தில் உள்ளது.

ஆனால் டெல்லியை எதிர்த்து விளையாட உள்ள வார்னர் தலைமையிலான ஐதராபாத் அணி, இந்த தொடரில் இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் ஆறில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்தில் வலுவான நிலையில் உள்ளது.

ஐதரபாத் அணியின் கேப்டன் வார்னர், துவக்கத்தில் இருந்து பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் திடீரென ஷிகர் தவானும் பார்முக்கு வந்துள்ளார். எனவே இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணியின் பேட்டிங் களை கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி அணியை பொறுத்தவரை கடைசி ஐந்து போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்துள்ளது. ஜாகிர் கான் மற்றும் மோரிஸ் போன்ற அனுபவ பந்துவீச்சாளர்கள் இருந்தாலும், அந்த அணி தொடர்ந்து பந்துவீச்சில் பின்னடைவை சந்தித்து வருகிறது.இன்றைய போட்டியில் டெல்லி அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசவில்லை எனில், ஐதராபாத் எளிதாக இமாலய ஸ்கோரை எட்டுவது உறுதி.

இன்றைய போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றால், புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடம் பிடிக்கும். எனவே அதற்காக அந்த அணி சிறப்பாக செயல்பட முயற்சி செய்யும். அதே சமயம் சொந்த மண்ணில் போட்டி நடப்பதால், தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க டெல்லி அணியும் போராடும். இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு, டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் இந்த போட்டி துவங்க உள்ளது.

IPL season 2017: Sunrisers Hyderabad vs Delhi Dare devils

அடுத்த செய்தி

டிரெண்டிங்