ஆப்நகரம்

ஸ்ரீசாந்த் ஸ்பாட் பிக்சிங் குறித்த நிலை என்ன? : ஐகோர்ட் கேள்வி!

ஸ்ரீசாந்த் மற்றும் அஜித் சண்டிலா, அங்கித் சவான் ஆகியோரின் ஸ்பாட் பிக்சிங் வழக்கு குறித்து அனுப்பிய நோட்டீஸ் குறித்து டெல்லி ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

Samayam Tamil 2 Apr 2019, 7:01 pm

ஹைலைட்ஸ்:

  • இந்த தீர்ப்பு குறித்து நிர்வாகிகள் கமிட்டி தலைவர் வினோத் ராய் சுப்ரீம் கோர்ட் உத்தரவின் நகல் கிடைத்தவுடன். தீர்ப்பு குறித்து நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Sreesanth
புதுடெல்லி: ஸ்ரீசாந்த் மற்றும் அஜித் சண்டிலா, அங்கித் சவான் ஆகியோரின் ஸ்பாட் பிக்சிங் வழக்கு குறித்து அனுப்பிய நோட்டீஸ் குறித்து டெல்லி ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியாவில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல்., கிரிக்கெட் தொடரில், கடந்த 2013ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த், ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டார்.

மூன்று பேருக்கு வாழ்நாள் தடை:
இவர் மீதான ஸ்பாட் பிக்சிங் குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, இவருக்கு வாழ்நாள் தடைவிதித்து பிசிசிஐ., உத்தரவிட்டது. ஸ்ரீசாந்த் உடன் அஜீத் சாண்டிலியா, அங்கீத் சவான் ஆகியோருக்கு வாழ்நாள் தடைவிதிக்கப்பட்டது.

மறுபரிசீலனை:
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த கேரள நீதிமன்றம் ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்கியது. இதை எதிர்த்து பிசிசிஐ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்க மூன்று மாதங்களுக்குள் மறுபரிசீலனை செய்யலாம் என உத்தரவிட்டது.
ஐகோர்ட் கேள்வி:
இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து நிர்வாகிகள் கமிட்டி தலைவர் வினோத் ராய் சுப்ரீம் கோர்ட் உத்தரவின் நகல் கிடைத்தவுடன். தீர்ப்பு குறித்து நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த நோட்டீஸ் குறித்து இதுவரை எவ்வித பதிலும் இல்லை என்றும் நிலைப்பாட்டை விரைவில் தெரிவிக்கும்படியும் கேள்வி எழுப்பியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்