ஆப்நகரம்

‘சாம்சனுக்கு பச்சை துரோகம் செய்யும் பிசிசிஐ’…ஷ்ரேயஸ் ஐயர்ர்ர் அவ்வளவு முக்கியமா? பொய் சொல்லி மாட்டிக்கிட்டிங்ளே!

சஞ்சு சாம்சன் விவகாரத்தில் பிசிசிஐ பச்சை பொய் சொல்லி ரசிகர்களிடம் வசமாக மாட்டியுள்ளது.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 28 Nov 2022, 10:51 am
டி20 உலகக் கோப்பை 2022 தொடருக்கு முன், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சன் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். குறிப்பாக பினிஷராகவும் செயல்பட்டார்.
Samayam Tamil ஷ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன்


இதனால், டி20 உலகக் கோப்பை 2022 தொடர் முடிந்த பிறகு சாம்சனுக்கு தொடர்ந்து அணியில் இடம் கிடைக்கும் எனக் கருதப்பட்டது. ஆனால், தற்போது நியூசிலாந்துக்கு எதிராக டி20 தொடரில் களமிறக்கப்படவே இல்லை. அதேபோல், ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் வாய்ப்பு கொடிப்பட்ட பிறகு அடுத்த போட்டியில் கழற்றிவிடப்பட்டார்.

2019ஆம் ஆண்டிலேயே இந்திய அணிக்கு அறிமுகமான போதும், இதுவரை இந்திய அணிக்காக மொத்தம் 10 ஒருநாள், 16 டி20 போட்டிகளில் மட்டும்தான் இந்திய அணிக்காக விளையாடியிருக்கிறார். ஐபிஎலில் தொடர்ந்து ரன்களை குவித்து வரும் நிலையில், இவருக்கு ரெகுலராக வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சாம்சன் நீக்கம், ஷ்ரேயஸ் ஐயர் சேர்ப்பு:

சாம்சனக்கு ஒரு பக்கம் வாய்ப்புகள் மறுக்கப்படும் அதேவேளையில், பவுன்சருக்கு தொடர்ந்து திணறி வரும் ஷ்ரேயஸ் ஐயருக்கு டி20 உலகக் கோப்பை தொடரில் ரிசர்வ் வீரராகவும், நியூசிலாந்து டி20 தொடரின் லெவன் அணியிலும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இரண்டு போட்டிகளிலும் பவுன்சரை எதிர்கொள்ள முடியாமல் ஒருசில பந்துகளில் ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து டெஸ்டில் கூட:

சமீபத்தில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரின்போதும், இங்கிலாந்து பயிற்சியாளர் மெக்கல்லம், பெவிலயனில் இருந்து ஷ்ரேயஸ் ஐயருக்கு பவுன்சர் போடுங்கள் என பௌலர்களுக்கு சைகை காட்டிய நிலையில், பௌலர்களும் அதேபோல் பந்துவீசி ஷ்ரேயஸ் ஐயர் விக்கெட்டை வீழ்த்தினார்கள்.

இப்படி, தனக்கு பவுன்சர்தான் பௌலர்கள் வீசப் போகிறார்கள் எனத் தெரிந்தும், அதற்கேற்றாற்போல் விளையாடாமல் ரிஷப் பந்த் ஆட்டமிழந்து வந்தார். அப்படிப்பட்டவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை கொடுத்துவிட்டு, சாம்சனை புறக்கணிப்பது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பிசிசிஐ சொல்லும் காரணம்:

இருப்பினும், ஷ்ரேயஸ் ஐயருக்கு இப்படி முக்கியத்துவம் கொடுக்க காரணம் இருக்கிறது என பிசிசிஐ வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஷ்ரேயஸ் ஐயர் பவுன்சருக்கு எதிராக திணறினாலும், ஸ்பின்னர்களை இவரைவிட சிறப்பாக அட்டாக் செய்யும் இந்திய பேட்டர்கள் இல்லை என்றே சொல்லலாம். எப்பேர்ப்பட்ட ஸ்பின்னர்களையும் அசால்ட்டாக எதிர்கொள்ள கூடியவர். இந்தியாவில் சுழற்பந்து வீச்சுதான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால், இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் ஷ்ரேயஸ் ஐயர் நிச்சயம் தேவை. இந்தியாவில் பவுனர்சர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. இதனால், இந்தியாவில் சாம்சனைவிட ஷ்ரேயஸ் ஐயர்தான் பெஸ்ட் என்கிறது பிசிசிஐ.

ஷ்ரேயஸ் ஐயர் தேவை, உண்மைதான்:

இந்தியாவில், அடுத்த ஆண்டில் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரவுள்ளது. இதில், நிச்சயம் ஷ்ரேயஸ் ஐயருக்கு இடம் கிடைக்கும் எனக் கருதப்படுகிறது. ஷ்ரேயஸ் ஐயர் மிடில் வரிசையில் களமிறங்க கூடியவர். இதனால், மிடில் ஓவர்களின்போதுதான் இவர் களமிறங்க வேண்டிய கட்டாயம் இருக்கும். ஒருநாள் தொடர்களில் மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்கள்தான் அதிகம் பந்துவீசுவார்கள். இதனால், ஷ்ரேயஸ் ஐயரால் அசால்ட்டாக ரன்களை குவிக்க முடியும். இந்த காரணத்திற்காகத்தான் ஷ்ரேயஸ் ஐயருக்கு டி20, ஒருநாள், டெஸ்ட் என அனைத்திலும் இனி ரெகுலராக இடம் கிடைக்கும் என பிசிசிஐ வட்டாரத்தில் கூறப்படுகிறது.

ரசிகர்கள் கேள்வி:

சரி, இந்திய பிட்ச்கள் ஸ்பின்னிற்கு ஏற்ற வகையில் இருக்கும் என்பதால்தான், இனி சாம்சனைவிட ஷ்ரேயஸ் ஐயருக்குத்தான் ரெகுலராக இடம் கிடைக்கும் எனக் கூறுவதை ஏற்றுக்கொள்கிறோம். பிறகு எப்படி, பவுன்சர்களுக்கு சாதகமான ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சனை ரிசர்வ் வீரராக சேர்க்காமல், ஷ்ரேயஸ் ஐயரை சேர்த்தீர்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ரசிகர்கள் கேட்கும் கேள்வியும் நியாயமானதுதான். எக்ஸ்ட்ரா பவுன்ஸ் பந்துகளை சாம்சனால் சிறப்பாக எதிர்கொள்ள முடியும். ஷ்ரேயஸ் ஐயர் திணறுவார். சாம்சன் விஷயத்தில் பிசிசிஐ பாரபட்சமாக நடந்துகொள்வதற்கு இதுதான் சாட்சி என ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்