ஆப்நகரம்

இரண்டு கோடி சம்பளம் வாங்கப் போகும் ஜடேஜா,புஜாரா..!

ஜடேஜா, புஜாரா, முரளி விஜய் ஆகிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஏ கிரேடில் இடம் பிடித்துள்ளனர்.

TNN 23 Mar 2017, 4:32 am
ஜடேஜா, புஜாரா, முரளி விஜய் ஆகிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஏ கிரேடில் இடம் பிடித்துள்ளனர்.
Samayam Tamil jadeja and pujara joined in grade 1 salary list
இரண்டு கோடி சம்பளம் வாங்கப் போகும் ஜடேஜா,புஜாரா..!


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், தனது சம்பள ஒப்பந்தத்தில் இருக்கக்கூடிய 32 வீரர்களின் பட்டியலை நேற்று வெளியிட்டது. இந்த பட்டியலில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் புஜாரா,ஜடேஜா மற்றும் முரளி விஜய் ஆகியோர் கிரேட் 1 -இல் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த கிரேடில் அடிப்படை சம்பளம் ரூபாய் 2 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

பி.சி.சி.ஐ வெளியிட்ட 32 வீரர்களின் பட்டியல் பின் வருமாறு:

கிரேடு 'ஏ' (ரூ. 2 கோடி): கோஹ்லி, தோனி, அஷ்வின், ரகானே, புஜாரா, ஜடேஜா, முரளி விஜய்.

கிரேடு 'பி' (ரூ. 1 கோடி): ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், விரிதிமன் சகா, பும்ரா, யுவராஜ் சிங்.

கிரேடு 'சி' (ரூ. 50 லட்சம்): தவான், அம்பதி ராயுடு, அமித் மிஸ்ரா, மணிஷ் பாண்டே, அக்சர் படேல், கருண் நாயர், ஹர்த்திக் பாண்ட்யா, ஆஷிஸ் நெஹ்ரா, கேதர் ஜாதவ், யுவேந்திர சாகல், பார்த்திவ் படேல், ஜெயந்த் யாதவ், மந்தீப் சிங், தவால் குல்கர்னி, ஷர்துல் தாகூர், ரிஷாப் பண்ட்.

Jadeja and Pujara joined in Grade 1 salary list

அடுத்த செய்தி

டிரெண்டிங்