ஆப்நகரம்

நிச்சயம் இந்தியாவுக்கு வருவேன் !

தோள்பட்டை காயத்தில் இருந்து மீண்டு நிச்சயம் இந்திய அணிக்கு எதிரான டெஸ்டில் பங்கேற்பேன் என இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.

TOI Sports 5 Oct 2016, 9:13 pm
லண்டன்: தோள்பட்டை காயத்தில் இருந்து மீண்டு நிச்சயம் இந்திய அணிக்கு எதிரான டெஸ்டில் பங்கேற்பேன் என இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil james anderson confident of england return in india tests
நிச்சயம் இந்தியாவுக்கு வருவேன் !


இங்கிலாந்து சென்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற போது, இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு, தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து தற்போது நடக்கும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ஆண்டர்சன் நீக்கப்பட்டார்.

இதற்கு பின் இந்தியா வரும் இங்கிலாந்து அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடரில் நிச்சயம் பங்கேற்பேன் என ஆண்டர்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆண்டர்சன் கூறியது:
காயத்தில் இருந்து சிறப்பாக குணமடைந்து வருகிறேன். தற்போது எந்த வலியும் இல்லை. ஆனால் பவுலிங் செய்யும் போதுதான் சிறு சிறு தொந்தரவுகள் உள்ளது. இதுவும் ஒருசில வாரங்களில் முழுவதுமாக குணமாகிவிடும் என தெரிவித்துள்ளனர். அதனால் நான் முழுவதுமாக இந்திய தொடரை மிஸ் பண்ன போவதில்லை. நிச்சயம் அதில் பங்கேற்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்