ஆப்நகரம்

ஈஸியா யாக்கர் பால் போடுவது எப்படி? - பும்ரா சொன்ன அருமையான டெக்னிக்

யாக்கர் மன்னன் ஜஸ்பிரிட் பும்ரா, தான் எப்படி யாக்கர் பால் போட கற்றுக்கொண்டார் என்ற விஷயத்தை கூறியுள்ளார்.

TOI Sports 14 Sep 2017, 6:28 pm
யாக்கர் மன்னன் ஜஸ்பிரிட் பும்ரா, தான் எப்படி யாக்கர் பால் போட கற்றுக்கொண்டார் என்ற விஷயத்தை கூறியுள்ளார்.
Samayam Tamil jasprit bumrah reveals the secret behind his accurate yorkers
ஈஸியா யாக்கர் பால் போடுவது எப்படி? - பும்ரா சொன்ன அருமையான டெக்னிக்


ஐபிஎல் மும்பை அணியில் இடம்பெற்றிருந்த பும்ரா தனது அபாரமான யாக்கர் பவுலிங் மூலம் படிப்படியாக முன்னேறி இந்திய அணியில் முக்கிய பவுலர்களின் வரிசையில் இடம்பெற்றுள்ளார்.

இக்கட்டான சூழலில் யாக்கர் பந்தை போட்டு எதிரணியை காலி செய்வதில் கில்லாடியான பும்ரா, எப்படி யாக்கர் பாலை போட கற்றுக்கொண்டேன் என விளக்கியுள்ளார்.

பும்ராவின் ரகசியம்:
பும்ரா பேசியதாவது, “எனக்கு சிறு வயதிலிருந்து வாசிம் அக்ரம் மிகவும் பிடிக்கும், அவரது யாக்கர் பாலை பார்த்து பலமுறை வியந்துள்ளேன். அப்போது முதல் ஒருவரை அவுட்டாக்க யாக்கர் பால் தான் எளிதான வழி என மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

என் வீட்டில் அவ்வளவாக விளையாட வெளியில் அனுப்ப மாட்டார்கள். வீட்டில் இருக்கும் நேரங்களில் நான் விளையாடும் மாடி அறையில் எப்போதும் பந்து வீசி பயிற்சி எடுப்பேன். அப்போது, நான் விளையாடுவது கீழே கேட்கும். அதனால், நான் பந்தை சரியாக சுவருக்கு மிக அருகில் பிச் ஆகுமாறு போடுவேன். அப்போது தான் சப்தம் கேட்காது, நான் நிறைய நேரம் விளையாட முடியும் என நம்பினேன்.

அப்படி சுவருக்கு அருகில் பிச் செய்த முயற்சியினால் தான், என்னால் இப்போது ஸ்டம்புக்கு அருகில் யாக்கர் பாலாக பவுலிங் செய்ய முடிகிறது”. என கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்