ஆப்நகரம்

ஊதா தொப்பி இனிமே உனக்கு இல்லை: உனட்கட் சவால்

பத்தாவது ஐபிஎல் தொடரில் புனே அணியில் விளையாடும் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனட்கட் அதிக விக்கெட் வீழத்தும் வீரருக்கான ஊதா நிற தொப்பியை கைப்பற்ற சவால் விடுத்துள்ளார்.

Samayam Tamil 14 May 2017, 9:11 pm
பத்தாவது ஐபிஎல் தொடரில் புனே அணியில் விளையாடும் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனட்கட் அதிக விக்கெட் வீழத்தும் வீரருக்கான ஊதா நிற தொப்பியை கைப்பற்ற சவால் விடுத்துள்ளார்.
Samayam Tamil jaydev unadkat challenges bhuvaneswar kumar to snatch orange cap
ஊதா தொப்பி இனிமே உனக்கு இல்லை: உனட்கட் சவால்


பத்தாவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளர் புனே அணியின் விளையாடி வருகிறார். அந்த அணியின் வெற்றிக்கு அதிக பங்காற்றிய அவர் ஹேட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

விளையாடிய பத்து போட்டிகளிலும் விக்கெட் வேட்டை நடத்திய அவர் 21 விக்கெட்டுகளை அள்ளியுள்ளார். அவரைப் போலவே சிறப்பாக செயல்பட்டு வரும் ஹைதராபாத் அணியின் புவனேஷ்வர் குமார் 25 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இத்தொடரின் பெரும் பகுதிக்கு அதிக விக்கெட் வீழ்த்தியவருக்கான ஊதா நிறத்தொப்பை தக்கவைத்து வரும் புவிக்கு எதிராக சவால் விடுத்துள்ளார் உனட்கட். இன்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி லீக் ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்ற அவர், இன்னும் நான்கு விக்கெட்டுகளே அதிகம் எடுத்துள்ள புவனேஷ்வர் குமாரிடமிருந்து ஊதா தொப்பியை கைப்பற்றுவேன் என்று உறுதிபடக் கூறியுள்ளார்.

இரண்டு இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இடையே ஏற்பட்டுள்ள இந்த போட்டி இந்திய கிரிக்கெட் அணிக்கு நன்மை பயக்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்களால் கணிக்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்