ஆப்நகரம்

92 ஆண்டுகளுக்கு பின் வாய்ப்பு மறுக்கப்படும் முதல் வீரர் கருண்நாயர்!

சுமார் 92 ஆண்டுகளுக்கு பின் முச்சதம் அடித்த பின் அடுத்த டெஸ்டில் வாய்ப்பு கிடைக்காமல் போன முதல் வீரர் கருண் நாயர்.

TOI Sports 9 Feb 2017, 9:31 am
ஹைதராபாத்: சுமார் 92 ஆண்டுகளுக்கு பின் முச்சதம் அடித்த பின் அடுத்த டெஸ்டில் வாய்ப்பு கிடைக்காமல் போன முதல் வீரர் கருண் நாயர்.
Samayam Tamil karun nair set to become second player ever to get dropped after scoring triple hundred
92 ஆண்டுகளுக்கு பின் வாய்ப்பு மறுக்கப்படும் முதல் வீரர் கருண்நாயர்!


இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன், வங்கதேச அணிக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் தொடரில் இந்திய அணி, பங்கேற்கவுள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் இன்று ஹைதராபாத்தில் நடக்கிறது.

இந்த டெஸ்ட் போட்டியில் சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டின் போது காயமடைந்த ரகானே முழுமையான குணமடைந்த காரணத்தினால், வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்குகிறார்.

இவர் காயமடைந்த போது, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு பெற்ற கருண் நாயர், அந்த அணிக்கு எதிராக சென்னையில் நடந்த கடைசி டெஸ்டில் முன்னாள் அதிரடி மன்னன் சேவக்கிற்கு பின் முச்சதம் அடித்த இந்தியர் என்ற சாதனை படைத்தார் கருண் நாயர். ஆனால் அந்த சரித்திர சாதனை டெஸ்ட் போட்டிக்கு பின், இந்திய அணி பங்கேற்கும் டெஸ்டில் இவரருக்கு இடம் கிடைக்கவில்லை.

இதற்கு முன் சுமார் 92 ஆண்டுகளுக்கு முன் கடந்த 1925ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து வீரர் ஆண்டி சாந்தாம், 325 ரன்கள் எடுத்தார். ஆனால் அடுத்த டெஸ்ட் போட்டியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அதன் பின் சாந்தாம் வேறு எந்த டெஸ்டிலும் விளையாட வில்லை. ஏனென்றால் அவர் இந்த முச்சதமடித்தது அவரது 40வது வயதில் தான்.

அதன் பின் கிரிக்கெட் வரலாற்றில் முச்சதம் அடித்த பின் அடுத்த டெஸ்டில் வாய்ப்பு மறுக்கப்படும் முதல் கிரிக்கெட் வீரர் கருண் நாயர் தான்.

Karun Nair has been in the headlines when he clinched his maiden triple hundred in the final test at Chennai against England last December.

அடுத்த செய்தி

டிரெண்டிங்