ஆப்நகரம்

அப்பாடா ஒரு வழியா தடைய நீக்கிட்டாங்க... திரும்ப டீமுக்கு திரும்புறது? - ஸ்ரீசாந்த்

இந்திய கிரிக்கெட் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த்துக்கு விதிக்கப்பட்டிருந்து கிரிக்கெட் விளையாடுவதற்கான வாழ்நாள் தடை நீக்கப்பட்டுள்ளது.

TOI Sports 17 Oct 2017, 8:11 pm
இந்திய கிரிக்கெட் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த்துக்கு விதிக்கப்பட்டிருந்து கிரிக்கெட் விளையாடுவதற்கான வாழ்நாள் தடை நீக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil kerala high court restores life ban on s sreesanth
அப்பாடா ஒரு வழியா தடைய நீக்கிட்டாங்க... திரும்ப டீமுக்கு திரும்புறது? - ஸ்ரீசாந்த்

2011ல் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் இடம்பெற்றிருந்த ஸ்ரீசாந்த் ஆக்ரோஷமாக பவுலிங் செய்வதில் வல்லவர். இவர் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றிருந்தார்.

அப்போது மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து பிசிசிஐ ஸ்ரீசாந்துக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் அவருக்கு கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.

தன் மீதான வாழ்நாள் தடையை விலக்க கோரி ஸ்ரீசாந்த் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட மாதம் தடையை உறுதி செய்திருந்தது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது.

அதில், ஸ்ரீசாந்த் கிரிக்கெட் விளையாட விதிக்கப்பட்டிருந்த வாழ்நாள் தடை நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி அவர் மீண்டும் ஐபிஎல் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்