ஆப்நகரம்

பழைய படத்தை பகிர்ந்த ‘கிங்’ கோலி... மரண கலாய் கலாய்த்த பீட்டர்சன்!

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி வெளியிட்ட பழைய போட்டோவை முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் மரண கலாய் கலாய்த்துள்ளார்.

Samayam Tamil 26 Dec 2019, 5:00 pm
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. தற்போது ஃபிட்டான விளையாட்டு வீரர்களில் ஒருவராக உள்ள கோலி, தனது ஆரம்ப காலத்தில் பப்ளியாக இருந்தார். அப்போது ஃபிட்னஸில் பெரிதாக கவனம் செலுத்துவதில்லை என்றும், டயட்டிலும் பெரிய அளவு அக்கறை கொள்ளவில்லை என பல பேட்டிகளில் அவரே தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Virat Kohli


10 ஆண்டுக்கு முன்
இதற்கிடையில் கோலி தற்போது, 10 ஆண்டுக்கு முன் எடுத்த தனது பழைய போட்டோவை பகிர்ந்துள்ளார். கோலி வெளியிட்டுள்ள பதிவில், “மாற்றத்துக்கான வியாழக்கிழமை. எனது ரியாக்‌ஷனே எல்லாத்தையும் தெரிவித்துவிடும்” என அதில் குறிப்பிட்டுள்ளார். அதைப்பார்த்த முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் கோலியை மரண கலாய் கலாய்த்துள்ளார்.
View this post on Instagram #TransformationThursday and my reaction says it all 👦🏻➡🧔🏻 . Thanks to my Philips Trimmer for a consistent clear cut performance. @sureshraina3 @royalnavghan ready to show your beard side to the world? 😉 @philipsindia #GetBearder A post shared by Virat Kohli (@virat.kohli) on Dec 25, 2019 at 11:41pm PST

அந்த பையன்
பீட்டர்சன் அளித்துள்ள பதிலில், “இடது பக்கத்தில் உள்ள பையனை எனக்கு நினைவிருக்கிறத.” என குறிப்பிட்டுள்ளார். கோலியின் இந்த தடாலடி மாற்றத்தால் தான், இந்த 10 ஆண்டுகளில் விஸ்டன் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் ஒருவராக இடம் பிடிக்கும் அளவு அவரை உயர்த்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்