ஆப்நகரம்

என்னை எதுக்கு இந்த வம்புக்கு இழுக்குறீங்க!

‘மேட்ச்-பிக்சிங் ’ புகாரில் சிக்கிய முன்னாள் தென் ஆப்ரிக்க வீரர் ஆல்விரோ பீட்டர்சனுக்கு பதிலாக இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் படத்தை தவறுதலாக பத்திரிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

TOI Sports 14 Nov 2016, 5:53 pm
ஜோகானஸ்பர்க்: ‘மேட்ச்-பிக்சிங் ’ புகாரில் சிக்கிய முன்னாள் தென் ஆப்ரிக்க வீரர் ஆல்விரோ பீட்டர்சனுக்கு பதிலாக இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் படத்தை தவறுதலாக பத்திரிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.
Samayam Tamil kevin pietersen not happy after paper publishes his picture instead of alviro petersen in fixing scandal
என்னை எதுக்கு இந்த வம்புக்கு இழுக்குறீங்க!


இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல்., தொடர் போல, தென் ஆப்ரிக்காவில் ஆண்டுதோறும் ராம் ஸ்லாம் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. கடந்த 2015ல் நடந்த ராம் ஸ்லாம் கிரிக்கெட் தொடரில், ஹய்வெல்ட் லயன்ஸ் அணிக்காக பங்கேற்ற போது , முன்னாள் தென் ஆப்ரிக்க வீரர் ஆல்விரோ பீட்டர்சன் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து செய்தி வெளியிட்டிருந்த பத்திரிக்கை ஒன்று, ஆல்விரோ பீட்டர்சனுக்கு பதிலாக, இங்கிலாந்து அணிக்காக விளையாடிய கெவின் பீட்டர்சன் படத்தை வெளியிட்டுள்ளது. இதைப்பார்த்த பீட்டர்சன், இதை தனது டுவிட்டர் பக்கத்தில் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். ஆனால் இவரும் தென் ஆப்ரிக்காவில் பிறந்தவர் தான்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்