ஆப்நகரம்

T20 Cricket: கிறிஸ் கெய்ல் இல்லை…இனி பொல்லார்ட்தான் ‘டான்’: யாரும் அசைக்க முடியாத செம்ம ரெக்கார்ட்!

கெய்ரன் பொல்லார்ட் வரலாற்றச் சாதனை படைத்து அசத்தியுள்ளார்.

Samayam Tamil 29 Sep 2021, 10:35 am
ஐபிஎல் 14ஆவது சீசன் நேற்றைய லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 135/6 ரன்கள் குவித்தது. இதனால், மும்பை இந்தியன்ஸ் இந்த இலக்கை சுலபமாக துரத்தி வெற்றிபெற்றுவிடும் என்றுதான் கருதப்பட்டது. ஆனால், 19ஆவது ஓவர்வரை சென்றுதான் 137/4 ரன்கள் சேர்த்து வெற்றிபெற்றது.
Samayam Tamil கெய்ரன் பொல்லார்ட்


பொல்லார்ட் 2 விக்கெட்கள்:

மைதானம் வேகம் குறைந்த பந்துகளுக்கு சாதகமாக இருந்ததால், கெய்ரன் பொல்லார்ட்க்கு பவர் பிளே முடிந்தபிறகு ஒரு ஓவர் கொடுக்கப்பட்டது. அந்த 8ஆவது ஓவரில் பொல்லார்ட் சிறப்பாக பந்துவீசி கிறிஸ் கெய்ல், கே.எல்.ராகுல் இருவரையும் வீழ்த்தி, 8 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இந்த ஓவர்தான் ஆட்டத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனால், ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

T20 World Cup 2021: மாறணும், பழைய பன்னீர் செல்வமா மாறணும்…இளம் வீரரை தட்டி எழுப்பும் அகார்கர்!

பொல்லார்ட் ரெக்கார்ட்:

இப்போட்டிக்கு முன்புவரை டி20 கிரிக்கெட்டில் பொல்லார்ட் 298 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் கெய்ல், ராகுல் ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தியதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 300 விக்கெட்களை சாய்த்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இவர் ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்திருந்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்களை எடுத்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்து, பெஸ்ட் ஆல்-ரவுண்டர் தான்தான் என்பதை நிரூபித்துள்ளார். கெய்ல் 14000 ரன்களை கடந்து முதலிடத்தில் இருக்கிறார். இருப்பினும், அவ்வளவாக விக்கெட்களை வீழ்த்தவில்லை.

இதனால், தற்போதைய டி20 கிரிக்கெட் உலகில் பொல்லார்ட்தான் தலைசிறந்த வீரர் என பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு, பொல்லார்டுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்