ஆப்நகரம்

கொஞ்சம் கூட ’ரைஸ்’ ஆகாத சன் ரைசர்ஸ் : கொல்கத்தா அணி அசத்தல் வெற்றி!

ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் கொல்கத்தா அணி, 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

TOI Sports 15 Apr 2017, 7:35 pm
கொல்கத்தா: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் கொல்கத்தா அணி, 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Samayam Tamil kkr won by 17 runs against srh
கொஞ்சம் கூட ’ரைஸ்’ ஆகாத சன் ரைசர்ஸ் : கொல்கத்தா அணி அசத்தல் வெற்றி!


இந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) நடப்பது வழக்கம். இந்த ஆண்டு பத்தாவது தொடர் துவங்கி நடந்து வருகிறது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் 14வது லீக் போட்டியில் கொல்கத்தா, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

இதில் முதலில் ‘டாஸ்’ வென்ற ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ராபின் உத்தப்பா (68), மணீஷ் பாண்டே (46) கைகொடுக்க, கொல்கத்தா அணி 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு, 172 ரன்கள் எடுத்தது.

சுமாரான ஆரம்பம்:
எட்டக்கூடிய இலக்கை துரத்திய ஐதராபாத் அணிக்கு டேவிட் வார்னர் (26), ஷிகர் தவான் (23) ஜோடி சுமாரான துவக்கம் அளித்தது. பின் வந்த ஹென்ரிக்ஸ் (13), கூடா (13) தாக்குபிடிக்க தவறினர்.

யுவராஜ் சொதப்பல்:
அடுத்து வந்த யுவராஜ் சிங் (26) சொதப்பலான முறையில் அவுட்டாக , ஐதராபாத் அணி 112 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து தத்தளித்தது. கடைசி நேரத்தில் பின் வரிசை வீரர்களும் சொதப்ப, ஐதராபாத் அணி, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்