ஆப்நகரம்

ஐபிஎல் கிரிக்கெட்: உத்தப்பாவுக்கு இரண்டு உசுரு!

ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் லீக் போட்டியில் கொல்கத்தா வீரர் உத்தப்பா இரண்டு முறை அவுட்டாவதில் இருந்து தப்பினார்.

TOI Sports 15 Apr 2017, 5:16 pm
கொல்கத்தா: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் லீக் போட்டியில் கொல்கத்தா வீரர் உத்தப்பா இரண்டு முறை அவுட்டாவதில் இருந்து தப்பினார்.
Samayam Tamil kkrs uthappa got 2 lives against srh
ஐபிஎல் கிரிக்கெட்: உத்தப்பாவுக்கு இரண்டு உசுரு!


இந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) நடப்பது வழக்கம். இந்த ஆண்டு பத்தாவது தொடர் துவங்கி நடந்து வருகிறது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் 14வது லீக் போட்டியில் கொல்கத்தா, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

இதில் முதலில் ‘டாஸ்’ வென்ற ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். இதில் கொல்கத்தா அணியில் பியூஸ் சாவ்லாவுக்கு பதிலாக குல்தீப் அணிக்கு திரும்பினார். ஐதராபாத் அணியில் முஸ்தபிசுர், சங்கர் ஆகியோருக்கு பதிலாக ஹென்ரிக்ஸ், பிபூல் சர்மா சேர்க்கப்பட்டனர்.

இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர் உத்தப்பாவிற்கு அதிர்ஷ்ட தேவதை அருகிலேயே அமர்ந்து கொண்டார். இவர், களமிறங்கிய உடனேயே ஐதராபாத் வீரர் புவனேஷ்வர் குமார் வீசிய பந்து, பேட்டில் பட்டு சென்றது. இதை விக்கெட் கீப்பரும் கேட்ச் பிடித்தார். ஆனால் அம்பயர் அவுட் இல்லை என தெரிவித்தார்.

பின் நெஹ்ரா வீசிய போட்டியின் 12வது ஓவரின் இரண்டாவது பந்து, இவரது பேடில் பட்டு செல்ல, இதையும் விக்கெட்கீப்பர் ஸ்மார்ட்டாக பிடித்தார். இதற்கு களத்தில் இருந்த அம்பயர்கள் அவுட் கொடுத்த போதும், கேட்ச் சரியாக பிடிக்கப்பட்டதா என உறுதி செய்ய , அம்பயர்கள் மூன்றாவது அம்பயரிடம் கேட்க, அதில் பந்து பேட்டில் படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இரண்டு முறை தப்பிய இவர் 68 ரன்கள் எடுத்து கட்டிங் வேகத்தில் அவுட்டானார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்