ஆப்நகரம்

இரண்டாவது டெஸ்ட் கே.எல்.ராகுல் சதம் !

வெஸ்ட் இண்டீ ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் கே.எல்.ராகுல் சதம் அடித்து அசத்தினார்.

TOI Contributor 31 Jul 2016, 11:53 pm
கிங்ஸ்டன் : வெஸ்ட் இண்டீ ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் கே.எல்.ராகுல் சதம் அடித்து அசத்தினார்.
Samayam Tamil kl rahul ton dominates wicketless session
இரண்டாவது டெஸ்ட் கே.எல்.ராகுல் சதம் !


வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்திய அணி வென்றது. இரண்டாவது டெஸ்ட் கிங்ஸ்டனில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 196 ரன்கல் எடுத்தது. முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி, முதல் இன்னிங்சில், 1 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்திருந்தது. ராகுல் (75), புஜாரா (18) அவுட்டாகாமல் இருந்தனர்.

இரண்டாவது ஆட்டத்தை துவங்கிய இந்திய அணிக்கு, ராகுல் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒருகட்டத்தில் தனது பொறுமையை இழந்த ராகுல், சிக்சர் அடித்து டெஸ்ட் அரங்கில், தனது மூன்றாவது சதத்தை பதிவு செய்தார். இரண்டாவது நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி, 1 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்திருந்தது. ராகுல் (107), புஜாரா (37) அவுட்டாகாமல் இருந்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்