ஆப்நகரம்

Virat Kohli: ஆஸிக்கு எதிராக பவுலிங் செய்து, விக்கெட் வீழ்த்தியதை நம்ப முடியாமல் சிரித்த கோலி

ஆஸிக்கு எதிரான பயிற்சி டெஸ்டில் கோலி விக்கெட் வீழ்த்தியதை அவராலேயே நம்பமுடியாமல் சிரித்தார்.

Samayam Tamil 1 Dec 2018, 7:03 pm
சிட்னி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது விராட் கோலியும் பவுலிங் செய்து விக்கெட் வீழ்த்தினார்.
Samayam Tamil Virat-Kohli-Bowling


ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. 3 டி20 போட்டி தொடர் இந்தியா, ஆஸ்திரேலியா 1-1 வென்றதால் என சமனில் முடிந்தது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பவுலிங் செய்தது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 358 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா 544 ரன்களை எடுத்தது.
பின்னர் 2வது இன்னிங்ஸ் ஆடிய இந்தியா 2 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்திருந்த போது போட்டி டிராவில் முடிவடைந்தது.

விக்கெட் கீப்பரை தவிர அனைத்து இந்திய வீரர்களும் பந்து வீசிய அதிசயம்

அணியில் இடம்பிடிக்க ஒரு ஓவரில் 26 ரன்களை விளாசி சதம் அடித்த முரளி விஜய்

கோலி பவுலிங்:

இந்த போட்டியின் போது இந்தியாவின் விக்கெட் கீப்பரை தவிர 10 வீரர்களும் பவுலிங் செய்தனர்.

கோலியின் பவுலிங்


அதில் கேப்டன் விராட் கோலியும் 7 ஓவர்கள் வீசி, ஆஸ்திரேலியாவின் சார்பாக 100 ரன்களை எடுத்த ஹேரி நீல்சனின் விக்கெட்டை வீழ்த்தினார்.

பயிற்சி டெஸ்ட் போட்டியில் வெறும் 27 பந்தில் அரை சதம் விளாசிய முரளி விஜய்

இந்திய பவுலர்களின் பந்தை சிதறடித்த ஹேரி நீல்சனின் விக்கெட் தன் பந்தில் வீழ்ந்ததை நம்ப முடியாத கோலி வித்தியாசமான அசட்டு சிரிப்பை சிரித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்