ஆப்நகரம்

பயிற்சியாளருக்கு கோஹ்லி வாழ்த்து !

துரோனாச்சாரியா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தனது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மாவுக்கு இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராத் கோஹ்லி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

TOI Sports 23 Aug 2016, 3:39 pm
போர்ட் ஆப் ஸ்பெயின்: துரோனாச்சாரியா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தனது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மாவுக்கு இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராத் கோஹ்லி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil kohli congratulates coach for dronacharya award
பயிற்சியாளருக்கு கோஹ்லி வாழ்த்து !


இந்திய விளையாட்டு வீரர்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் கேல் ரத்னா, அர்ஜூனா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல, விளையாட்டு பயிற்சியாளர்களுக்கு துரோனாச்சாரியா விருதுகள் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான விருதுக்கான பட்டியலில், ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் அசத்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை திபா கர்மாகரின் பயிற்சியாளர் பிஷேஷ்வர் நந்தி உள்ளிட்டோருக்கு அறிவிக்கப்பட்டது. இதில் கிரிக்கெட் பயிற்சியாளரான ராஜ்குமார் சர்மாவும் இடம்பிடித்துள்ளார். இவர் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லியின் பயிற்சியாளர். இவருக்கு கோஹ்லி தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
I am delighted for you on getting the Dronacharya Award (2/2)— Virat Kohli (@imVkohli) August 23, 2016
அதில் கோஹ்லி, பெரிய அளவில் சாதிக்கும் சாதனையார்களின் பின்னணியில் உள்ள கடினமான உழைப்பை யாரும் கண்டுகொள்வதில்லை. துரோனாச்சாரிய விருதுக்கு எனது வாழ்த்துக்கள் ராஜ்குமார் சார், என குறிப்பிட்டிருந்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்