ஆப்நகரம்

‘தல’ தோனியின் சாதனையை தூள் தூளாக்கிய ‘கிங்’ கோலி!

ஹாமில்டன்: நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை தகர்த்தார்.

Samayam Tamil 29 Jan 2020, 2:39 pm
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் இரண்டு டி-20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது. இரு அணிகள் மோதும் மூன்றாவது டி-20 போட்டி ஹாமில்டனில் இன்று நடக்கிறது.
Samayam Tamil Virat Kohli


ரோஹித் அரைசதம்
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா (65) அரைசதம் அடித்து கைகொடுக்க, இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது.

கோலி சாதனை
இப்போட்டியில் பங்கேற்ற விராட் கோலி 38 ரன்கள் அடித்தார். இவர் 25 ரன்கள் எடுத்த போது டி-20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய கேப்டன்கள் பட்டியலில் முன்னாள் இந்திய கேப்டன் தோனியை பின்னுக்கு தள்ளி கோலி மூன்றாவது இடம் பிடித்தார்.

கேப்டனாக டி-20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியல்
ஃபாப் டுபிளஸிஸ் (தென் ஆப்ரிக்கா) - 1273 ரன்கள்
கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து) - 1148 ரன்கள்
விராட் கோலி (இந்தியா) - 1126 ரன்கள்
தோனி (இந்தியா) - 1112 ரன்கள்

அடுத்த செய்தி

டிரெண்டிங்