ஆப்நகரம்

சீறிய இலங்கையை சுருட்டிய இந்தியா: சுளுக்கெடுத்த சகால், குல்தீப்!

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வீரர்கள் சீட்டுக்கட்டாக சரிய, 44.5 ஓவரில் 215 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

TOI Sports 17 Dec 2017, 5:00 pm
விசாகப்பட்டினம்: இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வீரர்கள் சீட்டுக்கட்டாக சரிய, 44.5 ஓவரில் 215 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Samayam Tamil kuldeep and chahal keep sri lanka down to 215
சீறிய இலங்கையை சுருட்டிய இந்தியா: சுளுக்கெடுத்த சகால், குல்தீப்!


இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு போட்டியின் முடிவில், இரு அணிகளும் தலா 1 போட்டியில் வென்றிருந்தது.

சொதப்பல் துவக்கம்:
இதனால் மூன்றாவது ஒருநாள் போட்டி ஃபைனலாக பரபரப்பு ஏற்பட்டது. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா, முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு துவக்க வீரர் குனதிலகா (13) சொதப்பல் துவக்கம் அளித்தார்.

தரங்கா மிரட்டல்:
பின் தரங்காவுடன் இணைந்த சதிரா, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி, இந்திய பந்து வீச்சை மிக எளிதாக சமாளித்தது. சதிரா ஒரு முனையில் நிதானமாக விளையாட மறுமுனையில், தரங்கா, பவுண்டரிகள், சிக்சர்கள் என தெறிக்கவிட்டார்.

துல்லிய ‘ஸ்டெம்பிங்:
இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்த போது சதிரா (42) அவுட்டானார். பின் மிரட்டிய தரங்கா 95 ரன்கள் எடுத்த போது தோனியின் துல்லிய ஸ்டெம்பிங்கில் அவுட்டானார். இதன் பின் இலங்கை அணி இறங்கு முகம் என்றே சொல்லலாம்.

55 ரன்களுக்கும் 8 விக்கெட்:
இதன் பின் வந்த மாத்யூஸ் (17), டிக்வெலா (8), குனரத்னே (17), பெரேரா (6), பதிரானா (7), தனஞ்சயா (1), லக்மல் (1) என வரிசையாக பெவிலியன் திரும்ப, 160 ரன்களுக்கு 2 விக்கெட் என இருந்த இலங்கை அணி, 215 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி சார்பில், சகால், குல்தீப் ஆகியோர் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்