ஆப்நகரம்

‘தல’ தோனி கொடுத்த 'பஸ்’ல, நான் டிராவல் பண்றேன், அவ்வளவு தான்: கோலி!

‘முன்னாள் கேப்டன் தோனி அமைத்துக்கொடுத்த அணியை தான் நான் வழிநடத்துவதாக,’ இந்திய கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.

TOI Sports 29 Sep 2017, 5:28 pm
பெங்களுரு: ‘முன்னாள் கேப்டன் தோனி அமைத்துக்கொடுத்த அணியை தான் நான் வழிநடத்துவதாக,’ இந்திய கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil long way to go to become one of indias greatest captains kohli
‘தல’ தோனி கொடுத்த 'பஸ்’ல, நான் டிராவல் பண்றேன், அவ்வளவு தான்: கோலி!


இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டியில் இந்திய அணி வெற்றது. இரு அணிகள் மோதிய நான்காவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், இரு அணிகள் மோதும் மிகவும் முக்கியத்துவம் இல்லாத ஐந்தாவது ஒருநாள் போட்டி நாக்பூரில் நாளை மறுநாள் நடக்கவுள்ளது. இந்நிலையில் தோனி தலைமையில் ஏற்கனவே செட்டான அணியைத்தான் வழிநடத்துவதாக இந்திய கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோலி கூறுகையில்,’ இந்திய அணியின் கேப்டன் என்ற முறையில் தொடர் வெற்றியின் போது எனக்கு பல பாராட்டுகள் வந்துள்ளது. இதற்காக நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தவிர, விமர்சனங்களும் தொடர்ந்து வந்துகொண்டே உள்ளது. ஆனால் என்னைப்பொறுத்தவரையில் ஏற்கனவே தோனி தலைமையில் விளையாடிய வீரர்கள் தான் தற்போதைய அணியில் உள்ளனர். நான் கேப்டன் என்ற முறையில் அவர்களை வழிநடத்துகிறேன். அதனால் சிறந்த இந்திய கேப்டன் என்ற பெருமைக்கு இன்னும் நான் நீண்ட தூரம் செல்ல வேண்டும். தோனிக்கு மேல் கங்குலி உள்ளார். அவர் வாய்ப்பு அளித்த பலர் இன்று ஜாம்பவான்களாக உள்ளனர். அவர்களை ஒப்பிடும் போது எனது
பயணம் தற்போது தான் துவங்கியுள்ளது.’ என்றார்.

BENGALURU: While Kohli expressed his pleasure accepted legend Sunil Gavaskar's compliment that the current Indian skipper would go down as "one of India's greatest cricket captains.", Kohli stated the jounre to being great in long.

அடுத்த செய்தி

டிரெண்டிங்