ஆப்நகரம்

TNPL: ’81 ரன்கள் வித்தியாசம்’...சம்பவம் செய்த மதுரை அணி..திருப்பூர் அணி படுதோல்வி!

திருப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் மதுரை அணி அபார வெற்றிபெற்றது.

Samayam Tamil 3 Aug 2021, 6:44 am
டிஎன்பிஎல் 5ஆவது சீசனின் 20ஆவது லீக் போட்டியில் மதுரை பாந்தர்ஸ், ஐடிரிம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
Samayam Tamil மதுரை பாந்தர்ஸ்


மதுரை இன்னிங்ஸ்:

மதுரை பாந்தர்ஸ் அணியில் அனைவரும் சிறப்பாக விளையாடினர். ஓபனர் பிரவீன் குமார் (35), சுகந்திரியன் (20) ஆகியோர் நல்ல துவக்கம் தந்தனர். இதனையடுத்து அனிரூத் சீதாராம் 25 பந்துகளில் 33 ரன்கள் விளாசினார். இறுதியில் கௌசிக் 40 (20), சதூர்வெத் 41 (23), அருண் கார்த்திக் 11 (3) ஆகியோர் ரன் மழை பொழிந்தனர். இதனால், மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 184/4 ரன்கள் குவித்து அசத்தியது.

திருப்பூர் இன்னிங்ஸ்:

இலக்கைத் துரத்திக் களமிறங்கிய திருப்பூர் அணியில் ஒருவர்கூட சிறப்பாக சோபிக்கவில்லை. மொத்தம் 8 பேர் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே அடித்தார்கள். இதனால், அணி 80 ரன்களை எட்டுவதே கடினம் எனக் கூறப்பட்ட நிலையில், 9ஆவது இடத்தில் களமிறங்கிய ராஜ் குமார் 28 பந்துகளில் 42 ரன்கள் விளாசி அணியின் ஸ்கோரை ஓரளவுக்கு உயர்த்தினார். இறுதியில் திருப்பூர் அணி 17.4 ஓவர்களில் 103/10 ரன்கள் அடித்து, 81 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது.

மதுரை பாந்தர்ஸ் பௌலர்கள் சிலம்பரசன், கௌதம், ஸ்ரீநிவாஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்