ஆப்நகரம்

நியூசி., யை வென்றது எப்படி : மிஸ்ரா விளக்கம்!

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது எப்படி என்ற ரகசியத்தை அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

TOI Sports 31 Oct 2016, 7:50 pm
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது எப்படி என்ற ரகசியத்தை அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil match winner amit mishra reveals how he foxed new zealand batsmen
நியூசி., யை வென்றது எப்படி : மிஸ்ரா விளக்கம்!


இந்தியா வந்த நியூசிலாந்து அணி,
5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதன் முதல் நான்கு போட்டியின் முடிவில், இரு அணிகளும் தலா இரண்டு போட்டியில் வென்றிருந்தது.

இத்தொடரில் அஷ்வின், ஜடேஜா உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் தான் சீனியர் வீரரான அமித் மிஸ்ரா சுமார் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி முன்னோடியாக திகழ்ந்தார்.

இதுகுறித்து அமித் மிஸ்ரா கூறியது:
அணியில் தற்போது சீனியர் விரராக இருந்து இளம் வீரர்களை வழிநடத்துவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களிடம் எனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள் இது ஒருநல்ல வாய்ப்பாக அமைந்தது. நாம் நன்றாக செயல்பட்டால் அவர்களும் நல்ல பவுலிங் செய்ய வேண்டும் என்ற ஊக்கம் தானாக உருவாகும். இத்தொடரில் விக்கெட் கைப்பற்றுவது மட்டுமே ஒரே இலக்காக இருந்தது.

தவிர, பயிற்சியாளர் கும்ளேவும் பல விதங்களில்,உதவுகிறார். கடைசி நிலை வீரர்கள் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பது கூட அவர் ஆலோசனை வழங்குவார்.
இவ்வாறு அமித் மிஸ்ரா கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்