ஆப்நகரம்

பட்டு வேஷ்டி சட்டையில் மதுரையில் சாமி தரிசனம் செய்த மேத்யூ ஹைடன்

ஆஸ்திரேலிய முன்னாள் அதிரடி கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

TNN 10 Aug 2016, 6:37 am
மதுரை : ஆஸ்திரேலிய முன்னாள் அதிரடி கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
Samayam Tamil matthew hayden in madurai hopes tn premier league unearths new talent
பட்டு வேஷ்டி சட்டையில் மதுரையில் சாமி தரிசனம் செய்த மேத்யூ ஹைடன்


ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை போல, தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிக்கள் விரைவில் நடத்தப்பட் உள்ளது. இதற்கான 8 அணிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கன ஏலமும் முடிந்து விட்டது.

இதற்கான புரோமோஷன் செய்யும் வேலையின் முதல் கட்டமாக முன்னாள் ஆஸ்திரேலிய அதிரடி கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் மதுரை வேலம்மாள் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மதுரை வந்தார்.

What heat? Feeling cool in the veshti down here in Madurai. #TNPL @tnpremierleague pic.twitter.com/5qAhnuJoet— Matthew Hayden AM (@HaydosTweets) August 9, 2016

முதல்முறையாக மதுரைக்கு வந்த ஹைடன் பட்டு வேஷ்டி சட்டையுடன் மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

It's all happening down in Madurai....oh yer feeling the #magizhchi @TNPremierLeague pic.twitter.com/tjMzXeAsnl— Matthew Hayden AM (@HaydosTweets) August 9, 2016

பின்னர் வேலம்மாள் கல்லூரியில் நட்நத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்