ஆப்நகரம்

”நானும் ஆட்டோகாரன் தான்”-நிரூபித்துக்காட்டிய மைக்கேல் கிளார்க்..!

பெங்களூரு வந்துள்ள ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்,அங்கு ஆட்டோ ஓட்டிப் பழகியுள்ளார்.

TNN 2 Mar 2017, 10:52 am
பெங்களூரு வந்துள்ள ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்,அங்கு ஆட்டோ ஓட்டிப் பழகியுள்ளார்.
Samayam Tamil michael clarke drives an auto rikshaw at bangalore
”நானும் ஆட்டோகாரன் தான்”-நிரூபித்துக்காட்டிய மைக்கேல் கிளார்க்..!


இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி,நாளை பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் துவங்க உள்ளது.இந்த போட்டித் தொடரில் கமெண்டரி செய்து வரும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்,இதற்காக பெங்களூர் வந்துள்ளார்.

இந்நிலையில் பெங்களூரை சுற்றிப் பார்த்த மைக்கேல் கிளார்க்கிற்கு,ஆட்டோ ஓட்டிப்பார்க்க வேண்டும் என்ற ஆசை எழுந்துள்ளது.எனவே அந்த வழியாக சென்ற ஆட்டோவை நிறுத்திய மைக்கேல் கிளார்க்,ஓட்டுநரிடம் ஆட்டோ ஓட்டுவது குறித்து சில நிமிடங்கள் கற்றுக் கொண்டார்.பின்னர் சிறிது தூரத்திற்கு ஆட்டோவும் ஓட்டிப் பார்த்தார்.இந்த நிகழ்வுகள் அடங்கிய வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் மைக்கேல் கிளார்க்.



Michael Clarke drives an auto Rikshaw at Bangalore

அடுத்த செய்தி

டிரெண்டிங்