ஆப்நகரம்

10,000 பட்டியலில் இணைந்தார் முகமது கைப்!

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் முகமது கைப், முதல் தர போட்டிகளில் 10,000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார்.

TOI Sports 10 Oct 2016, 1:37 pm
இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் முகமது கைப், முதல் தர போட்டிகளில் 10,000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார்.
Samayam Tamil mohammad kaif joins elite list of players to score 10000 runs in first class cricket
10,000 பட்டியலில் இணைந்தார் முகமது கைப்!


இந்தியாவின் பல்வேறு பகுதியில் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் சத்தீஸ்கர் அணிக்காக விளையாடிய கைப், திரிபுரா அணிக்கு எதிரான போட்டியில் இம்மைல்கல்லை எட்டினார்.

இப்போட்டிக்கு முன் 26 ரன்கள் எடுத்தால் இம்மைல்கலை எட்டிவிடலாம் என்ற நிலையில் களமிறங்கிய கைப், அதைவிட 1 ரன் கூடுதலாக எடுத்து (27 ரன்கள்) அவுட்டானார். இவர் தற்போது வரை 178 முதல்தர போட்டிகளில் பங்கேற்று, 10,001 ரன்கள் எடுத்துள்ளார்.

10 ஆண்டுகள்....
முகமது கைப் கடைசியாக இந்திய அணிக்காக சுமார் 10 ஆண்டுகளுக்கு முன், கடந்த 2006ல் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்டில் பங்கேற்றார். சுமார் 10 ஆண்டுகள் தொடர்ந்து மனம் தளராமல் போராடிவரும் இவருக்கு கடந்த 2013ல் மீண்டும் அணிக்கு திரும்ப நல்ல வாய்ப்பு இருந்தது. ஆனால் தற்போது இவருக்கு இது கேள்விக்குறியான விஷயம் தான்.

பார்தீவ் ‘9000’:
இதேபோல மற்றொரு இந்திய வீரர் பார்தீவ் படேல், 9000 முதல் தர ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்