ஆப்நகரம்

எலும்பு முறிவு, முகமது ஷமி அவதி: நடராஜனுக்கு வாய்ப்பு?

முகமது ஷமிக்கு எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 20 Dec 2020, 11:47 am
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியின்போது காயமானார்.
Samayam Tamil ind vs aus


இரண்டாவது இன்னிங்ஸ் 21.2ஆவது ஓவரில், பேட் கம்மின்ஸ் வீசிய பவுன்சரை சரியாகக் கணிக்காததால் வலது கைப் பகுதியில் அடிபட்டது. இதனால், அவர் தொடர்ந்து பேட்டிங் செய்யாமல் பெவிலியன் திரும்பி ரிட்டையர்ட் அவுட் ஆனார்.

இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லப்பட்ட ஷமிக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது, வலது கை பகுதியில் எழும்பு முறிவு ஏற்பட்டது தெரிய வந்தது. இதனால், அவர் எஞ்சிய மூன்று டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து, பிசிசிஐ நிர்வாகி ஒருவர் பேசியபோது, “முகமது ஷமிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவர் எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பது சந்தேகம்தான்” எனத் தெரிவித்தார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

ரோஜாவை திட்டம் போட்டு கடத்திய அனு… என்னமா பிளான் பண்றா… முடியலடா சாமி!

ஏற்கனவே விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டி முடிந்த நிலையில், தனது மனைவி பிரசவத்தின்போது அருகில் இருப்பதற்காக நாடு திரும்புகிறார். தற்போது, முன்னணி வேகப் பந்து வீச்சாளர் முகமது ஷமியும் காயத்தால் அவதிப்படுவதால் இந்திய அணிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இவருக்கு மாற்று வீரராகத் தமிழகத்தைச் சேர்த்த நடராஜன் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், பயிற்சி டெஸ்டில் சிறப்பாகப் பந்துவீசிய நவ்தீப் சைனி XI அணியில் இடம்பெறக் கூடும் எனக் கருதப்படுகிறது.

இந்திய அணிக்கு ஷாக் கொடுக்கும் டிசம்பர் 19...‘பாட்ஷா டூ மாணிக்கம்’ கதை!

இரு அணிகளும் பங்கேற்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் டிசம்பர் 26ஆம் தேதி பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக நடைபெறவுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்