ஆப்நகரம்

ரன் சேர்ப்பதில் புதிய சிகரம் தொட்ட தோனி!

அதிக ரன்களை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் தல தோனி 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

TOI Sports 1 Jul 2017, 3:23 am
அதிக ரன்களை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் தல தோனி 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
Samayam Tamil ms dhoni becomes indias fourth highest run scorer in odis
ரன் சேர்ப்பதில் புதிய சிகரம் தொட்ட தோனி!


இந்திய கிரிக்கெட் அணியில் தலையாக செயல்படும் தோனி பல சாதனை மைல்கற்களை கடந்தவர். இவர் தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பை கிரிக்கெட், மினி உலகக் கோப்பை (சாம்பியன்ஸ் டிராபி), டி20 உலகக் கோப்பை ஆகிய 3 உலகக் கோப்பையை வென்று கொடுத்தவர்.

தற்போது அதிக ரன்கள் சேர்த்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்துள்ளார். விண்டீஸ் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியின் போது தோனி 15 ரன்களை எடுத்த போது, முன்னாள் கேப்டன் அசாருதீனை பின்னுக்கு தள்ளி இந்த மைல் கல்லை எட்டியுள்ளார். இந்த போட்டியில் தோனி மொத்தம் 78 ரன்களை குவித்தார்.

அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள்:
இந்த பட்டியலில் லிடில் மாஸ்டர் சச்சின் முதலிடத்தில் உள்ளார்.

வீரர் - ரன்
சச்சின் : 18426
கங்குலி : 11363
டிராவிட் : 10889
தோனி : 9442
அசாருதீன் : 9378

அடுத்த செய்தி

டிரெண்டிங்