ஆப்நகரம்

உலகக்கோப்பை ரன் அவுட் குறித்து வாயை திறந்த ‘தல’ தோனி!

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ரன் அவுட் குறித்து, ஒரு வழியாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி பேசியுள்ளார்.

Samayam Tamil 12 Jan 2020, 4:34 pm
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இங்கிலாந்தில் நடந்த 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது ஆமைவேக பேட்டிங் காரணமாக கடும் விமர்சனத்தை எதிர்கொண்டார். இதன் அரையிறுதியில் தோனியின் ரன் அவுட் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
Samayam Tamil MS Dhoni


விருப்ப ஓய்வு
அந்த கடும் விமர்சனத்துக்கு பின் தற்போது வரை தோனி தானாக ஓய்வில் உள்ளார். இந்நிலையில் இந்திய இதயங்களை உடைத்த அந்த மோசமான ரன் அவுட் குறித்து தோனி முதல் முறையாக தோனி பேசியுள்ளார்.

இதுகுறித்து தோனி கூறுகையில், “எனது முதல் போட்டியில் நான் ரன் அவுட்டானேன். அதேபோல உலகக்கோப்பை அரையிறுதி போட்டியிலும் நான் ரன் அவுட்டானேன். தற்போது வரை நான் எனக்குள் கேட்டுக்கொண்டுள்ள ஒரே ஒரு விஷயம் நான் ஏன் டைவ் அடிக்கவில்லை என்று தான். அந்த இரண்டு இஞ்ச் தான் இவ்வளவு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது. நான் கண்டிப்பாக டைவ் அடித்திருக்க வேண்டும்” என்றார்.

வெறும் 5 ரன்
உலகக்கோப்பை அரையிறுதியில் தோனி அவுட்டானவுடன் கூடுதலாக 5 ரன்கள் சேர்த்த நிலையில் சஹால், புவனேஷ்வர் குமார் ஆகியோர் வெளியேறினர். இதையடுத்து இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்