இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன் படி, கே.எல்.ராகுல் மற்றும் ரோகித் சர்மா இருவரும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய கே.எல். ராகில் பவுண்டரிகளாக விளாசினார். இதில், சர்மா 17 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 24 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு இலங்கை பவுலர்களை கொஞ்ச நேரம் திணறவிட்ட கே.எல்.ராகுல் 48 பந்துகளில் 7 பவுண்டரிகள், ஒரு சிக்சர் உள்பட 61 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இந்த நிலையில், இலங்கை அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த பட்டியலில் கே.எல் ராகுல் 4வது இடம் பிடித்துள்ளார். இவரைத் தொடர்ந்து தோனி மற்று மணீஷ் பாண்டே இருவரும் ஓரளவு ரன்கள் சேர்த்தனர். வெறும் 18 பந்துகளில் மணீஷ் பாண்டே 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் உள்பட 32 ரன்கல் எடுத்தார். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் குவித்துள்ளது. கடைசி ஓவரில் சிறப்பாக விளையாடி தல தோனி வழக்கம் போல கடைசி பந்தில் தன்னுடைய வான வேடிக்கையை காட்டினார். கடைசி பந்தில் சிக்சர் விளாசிய சிறந்த மேட்ச் பினிஷர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார் தல தோனி. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.